மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், தெலுங்கானாவில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில் தெலுங்கானா முதல்வரும் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு மார்ச் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கவிதா, விசாரணையை தன் வீட்டிலேயே வைத்து நடத்துமாறு கோரினார். பெண்களிடம் விசாரிப்பதாக இருந்தால் அவர்களை வரவழைக்காமல் வீட்டிலேயே விசாரணை நடத்த சட்டத்தில் இடம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.

பிறப்பு உறுப்பில் உடைந்த ஊசி... தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்!

அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை டெல்லியில் உள்ள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியது. அதற்கு ஒப்புக்கொண்ட கவிதை, மார்ச் 16ஆம் தேதி நேரில் ஆஜராவதாகக் கூறினார். ஆனால் மீண்டும் கவிதாவின் கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் மார்ச் 11ஆம் தேதி ஆஜராவதாகக் கவிதா கூறினார். அதன்படி இன்று அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

டெல்லியில் உள்ள குடும்ப இல்லத்திற்கு கவிதாவுடன் அவரது சகோதர் கே. டி. ராமா ராவும் வந்துள்ளார். ராஷ்டிர சமிதி கட்சித் தொண்டர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவிவிடுகிறது என்று விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டர்கள், அமலாக்கத்துறை ரெய்டு மூலம் அனைவரையும் காவி நிறத்திற்கு மாற்றலாம். ஆனால், கவிதாவை காவிக்கு மாற்ற முடியாது என்று கூறுவது போல் உள்ளன. 'உண்மையான நிறம் வெளுக்காது' என்ற வாசகமும் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: நந்தனம் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது!