பன்னாட்டு நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களாக இந்தியர்கள்: எலான் மஸ்க்கை ஈர்த்த பட்டியல்!
பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியினர் இருப்பது எலான் மஸ்க்கை ஈர்த்துள்ளது
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் நிலவின் பரப்பில் தடம் பதித்த நான்காவது நாடாக மாறியுள்ள இந்தியா, தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், தனது எக்ஸ் தளத்தில் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, சந்திரயான்3க்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதற்கு 'super cool' என எலான் மஸ்க் பதிலளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, world of statistics என்ற எக்ஸ் பக்கத்தில், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டது. சுமார் 21 நிறுவனங்கள் கொண்ட அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைவரும் இந்திய வம்சாவளியினரே. இந்த பதிவை கண்டு வியந்துள்ள எலான் மஸ்க், அந்த பட்டியல் தன்னை ஈர்ப்பதாக பதிவிட்டுள்ளார்.
பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பவர்கள் பட்டியல்
** ஆல்பபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர்.
** மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா. இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தவர்.
** YouTube இன் CEO: நீல் மோகன். அமெரிக்காவின் இந்தியானாவில் உள்ள லாஃபாயெட்டில் இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர்.
** Adobe இன் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயண். இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தவர்.
** உலக வங்கி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா. இந்தியாவின் புனேவில் பிறந்தவர்.
** IBM இன் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா. இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தவர்.
** Albertsons நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் சங்கரன். இந்தியாவில் பிறந்தவர்.
** NetApp இன் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் குரியன். கேரளாவில் பிறந்தவர்
** Palo Alto Network நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிகேஷ் அரோரா. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பிறந்தவர்.
** அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைமை செயல் அதிகாரி ஜெய்ஸ்ரீ உல்லால். இங்கிலாந்தின் லண்டனில் இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர்.
** நோவார்டிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. வசந்த் நரசிம்மன். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர்.
** ஸ்டார்பக்ஸ் தலைமை செயல் அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன். இந்தியாவின் புனேவில் பிறந்தவர்.
** மைக்ரோன் டெக்னாலஜியின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்தவர்
** Flex நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரேவதி அத்வைத. இந்தியாவில் பிறந்தவர்.
** Wayfair நிறுவனத்தின் சி.இ.ஓ. நிராஜ் ஷா - இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர்.
** Chanel நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லீனா நாயர், மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் பிறந்தவர்.
** OnlyFans நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆம்ரபாலி கான். இந்தியாவில் பிறந்தவர். ஜூலை மாதம் இவருக்கு பதிலாக கெய்லி பிளேயர் என்பவர் நியமிக்கப்பட்டார்.
** Motorola Mobility சி.இ.ஓ. சஞ்சய் ஜா. பீகார் மாநிலத்தில் பிறந்தவர்.
** Cognizant நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிகுமார். இந்தியாவில் பிறந்தவர்.
ரூ.2000 நோட்டை இன்னும் வச்சிருக்கீங்களா? ஒரு மாசம் தான் டைம்!