2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு பல மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கர்நாடக தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது, பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) பின்னுக்குத் தள்ளியுள்ளது.. அதுமட்டுமின்றி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கிங்மேக்கராகும் நம்பிக்கையை சிதைத்தது. இந்த தேர்தல் முடிவுகள் 2024 மக்களவை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எனினும் காங்கிரஸ் கட்சி இன்னும் பல சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது.. ஆம். 2014 முதல் மாநிலங்களவைத் தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தல்களில் வெற்றிகளை விட அதிக தோல்விகளைக் கண்ட பிறகு காங்கிரஸ் தனது தகுதியை நிரூபிக்க அதிக இடங்களில் நிரூபிக்க வேண்டும். ஆனால், இந்த மாநிலங்களில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

தற்போது, ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மேலும் பீகார், தமிழ்நாடு, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஆளுங்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. எனவே நாடு முழுவதும் பல மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்ற முக்கியமானதாக கருதப்படுகிறது.

ராஜஸ்தான்

மாநிலத்தில் தற்போதைய 200 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் ஜனவரி 14, 2024 அன்று கலைக்கப்படும், மேலும் அடுத்த சட்டமன்றத் தேர்தல் டிசம்பருக்கு முன் நடத்தப்பட வாய்ப்புள்ளது. ராஜஸ்தானில் முந்தைய மாநிலத் தேர்தல் 2018 டிசம்பரில் நடைபெற்றது, அதில் காங்கிரஸ் வெற்றி பெற்று அசோக் கெலாட் முதல்வரானார்.

மத்திய பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு நவம்பர் 2023 அல்லது அதற்கு முன் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சட்டமன்றம் ஜனவரி 6, 2024 அன்று கலைக்கப்பட உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத்தை முதல்வராக்கியது. இருப்பினும்,. மார்ச் 2020 இல், 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு மாறினர், இதன் விளைவாக மாநில அரசாங்கம் கவிழ்ந்தது, இதனால் கமல்நாத் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் பாஜக ஆட்சி அமைத்து சிவராஜ் சிங் சவுகானை முதல்வராக்கியது.

சத்தீஸ்கர்

90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதத்திற்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டசபை ஜனவரி 3, 2024 அன்று கலைக்கப்பட உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பூபேஷ் பாகேலை முதல்வராக்கியது.

தெலுங்கானா

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 16, 2024 அன்று முடிவடையும். அம்மாநிலத்தில் டிசம்பர் 2023 அல்லது அதற்கு முன் அங்கு தேர்தல் நடைபெறும். தெலங்கானாவில் முந்தைய மாநிலத் தேர்தல் 2018 டிசம்பரில் நடைபெற்றது, இதில் டிஆர்எஸ் வெற்றி பெற்றது. சந்திரசேகர ராவ் முதல்வரானார்.

மிசோரம்

40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் டிசம்பர் 17, 2023 அன்று கலைக்கப்பட உள்ளது. நவம்பர்-டிசம்பர் 2023 இல் அல்லது அதற்கு முன் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும். கடந்த 2018 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில், மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று, ஜோரம்தங்கா முதல்வரானார்.