Asianet News TamilAsianet News Tamil

5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு : ஓர் விரிவான அலசல்

election dates-announced-u3va6r
Author
First Published Jan 4, 2017, 5:27 PM IST


உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று வெளியிட்டார்.

உத்தரப்பிரதேசத்துக்கு பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

பஞ்சாப், கோவா மாநிலத்துக்கு ஒருசேர, பிப்ரவரி 4-ந்தேதி வாக்குப்பதிவும், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிப்ரவரி 15-ந்தேதியும் தேர்தல் நடக்கின்றன.

election dates-announced-u3va6r

மணிப்பூர் மாநிலத்தில் மார்ச் 4 , 8ந் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 11-ந்தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

தேர்தல் ஆணையர்

 தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஏ.கே. ஜோதி, ஓ.பி. ராவத் ஆகியோர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.  அப்போது அவர் கூறியதாவது-

16 கோடி வாக்காளர்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளன.  5 மாநிலங்களிலும் உள்ள 690 தொகுதிகளிலும் 16 கோடி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். 1.85 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இது கடந்த 2012ம் ஆண்டைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாகும்.

7 கட்டம்

மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் பிப்ரவரி 11, 15, 19, 23, 27 தேதிகள், மார்ச் 4 மற்றும் 8 ந் தேதிகள் என மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதில்  15 மாநிலங்களில் உள்ள 73 தொகுதிகளுக்கு பிப்ரவரி 11-ந்தேதியும், 2-வது கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 67 தொகுதிகளுக்கும் 15ந்தேதியும், 3-வது கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 69 தொகுதிகளுக்கும் 19 ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. 4-வது கட்டமாக  53 தொகுதிகளுக்கு 23ந்தேதியும், 52 தொகுதிகளுக்கும்5-வது கட்டமாக 27-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.  6-து கட்டமாக  49தொகுதிகளுக்கு மார்ச் 4 ந்தேதியும், கடைசி மற்றும் 7-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு  மார்ச் 8-ந்தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

election dates-announced-u3va6r

பஞ்சாப், கோவா

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கும், கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும்  பிப்ரவரி 4-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கல் வரும் 11-ந்தேதி முதல் தொடங்குகிறது.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 15ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜனவரி 20 ந்தேதி முதல்வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மார்ச் 4 மற்றும் 8 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 11-ந்தேதி முதல் வேட்பு மனுவை வேட்பாளர்கள் தாக்கல் செய்யலாம்.

இந்த 5 மாநிலங்களுக்கும் வாக்கும் எண்ணிக்கை மார்ச் 11 ந்தேதி நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios