வனத்துறையைத் திணற வைக்கும் பேளுர் மக்னா யானை; 3வது நாளாகத் தொடரும் போராட்டம்

குட்டா-கட்டிகுளம் சாலை கடக்கும் இரும்புப் பாலம் உள்ள பகுதியில் பேளூர் மக்னா யானை உள்ளது என சமீபத்திய தகவலில் தெரியவந்துள்ளது. வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் ஆயத்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Efforts to capture Belur Makhna turn futile in Wayanad sgb

பேளூர் மக்னா காட்டு யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் முயற்சி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. யானை வனப்பகுதியில் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில் அதிகாலை ஐந்தரை மணியில் இருந்து யானை செல்லும் வழியை கண்காணிப்பு குழுவினர் பின்தொடர்கின்றனர்.

குட்டா-கட்டிகுளம் சாலை கடக்கும் இரும்புப் பாலம் உள்ள பகுதியில் பேளூர் மக்னா யானை உள்ளது என சமீபத்திய தகவலில் தெரியவந்துள்ளது. வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் ஆயத்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை மண்ணுண்டி வனப்பகுதியில் ஆள் உயரத்துக்கு மண்டி இருந்த முட்புதர்கள் பணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இரும்பு பாலம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் என்ன நிலை உள்ளது என தெரியவில்லை. யானையைத் தேடும் பணியில் ஆர்ஆர்டி குழுவும், கண்காணிப்பு குழுவும் தீவிரமாக இருக்கின்றன. அதே சமயம், அடர்ந்த புதர்கள் இருப்பதால் யானையின் ரேடியோ காலரில் இருந்து வரும் சிக்னல்களை சரியாகப் பெறுவதில் சிரமம் உள்ளது.

ஹமாஸ் பிடியில் இருந்து 2 பணயக்கைதிகள் மீட்பு! வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்!

நண்பகல் 12 மணிக்குப் பிறகு நின்றுபோன ரேடியோ காலர் சிக்னல் சில மணி நேரங்களுக்குப் பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் கிடைத்தது. யானை புதர்களின் மறைவில் இருந்ததால், பணிக்குழு மிகுந்த எச்சரிக்கையுடன் மட்டுமே செல்ல முடிந்தது.

நேற்று யானை இருந்த மண்ணுண்டி பகுதியில் இருந்து இரும்பு பாலம் வெகு தொலைவில் உள்ளது. யானையின் நடமாட்டத்திற்கு ஏற்ப கும்கி யானைகள், கால்நடை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

நேற்று இரவு, மூன்று வனச்சரக அலுவலர்கள் தலைமையில், 65 பேர், 13 குழுக்களாகப் பிரிந்து, ஆளில்லா விமானங்கள் மூலம், யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, விடியும் வரை கண்காணித்தனர். யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுப்பதிலும் இந்தக் குழுக்கள் கவனமாக இருந்தன.

திருச்சி பேருந்தில் கண்டக்டரை கண்மூடித்தனமாகத் தாக்கிய கும்பல்; வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios