இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட், காசா ஸ்டிரிப் பகுதியில் இன்னும் பணயக்கைதிகளாக இருக்கும் மீதமுள்ள 134 கைதிகளை விடுவிக்க இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
திங்கட்கிழமை தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் இருந்து இரண்டு பணயக்கைதிகளை வெற்றிகரமாக மீட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF), ஷின் பெட் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் காவல்துறையை உள்ளடக்கிய கூட்டு ராணுவ முயற்சியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவான ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட 130 நாட்களுக்குப் பிறகு, பெர்னாண்டோ சைமன் மர்மன் மற்றும் லூயிஸ் ஹார் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட மீட்பு நடவடிக்கையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தெற்கு காசா நகரில் இஸ்ரேலிய சிறப்புப் படைகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் இன்று முதல் UPI சேவை அறிமுகம்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவின் தாக்குதல்களின்போது இஸ்ரேலைச் சேர்ந்த் 253 பேர் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இவர்களில் பெர்னாண்டோ மர்மன் (61) மற்றும் லூயிஸ் ஹார் (70) ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் மூன்று பயங்கரவாதிகளின் பாதுகாப்பில் ஒரு குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த மூவரும் ஷின் பெட் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் இஸ்ரேல் காவல்துறையின் எலைட் யமாம் என்ற உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரிடம் சரண் அடைந்தவர்கள்.
மர்மன் மற்றும் ஹார் ஆகியோரை ஒரு தற்காலிக ஹெலிபேடிற்கு அழைத்துச் சென்று காப்பாற்றியதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. பணயக்கைதிகள் கயிறுகளைப் பயன்படுத்தி கட்டிடத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர் என்று எலைட் யமாம் பிரிவின் தளபதி கூறியுள்ளார்.
இந்நிலையில், பணயக்கைதிகளாக இருந்த இருவரையும் மீட்டது பற்றி இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட், காசா ஸ்டிரிப் பகுதியில் இன்னும் பணயக்கைதிகளாக இருக்கும் மீதமுள்ள 134 கைதிகளை விடுவிக்க இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
வாரக்கணக்கில் திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கை இஸ்ரேல் ராணுவத்தின் செயல்திறனை நிரூபித்துள்ளது என்றும் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு திருப்புமுனையாக இந்த மீட்பு நடவடிக்கை உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் கூறியுள்ளார்.
மின்சார வாகனங்களுக்கான மானியம் 11,500 கோடியாக உயர்வு! ரூ.1,500 கோடி கூடுதல் மானியம் அறிவிப்பு!
