ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு... கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுந்தது.
இதையும் படிங்க: சோடி போட்டு பாப்போமா சோடி... ரூ.1,609 கோடி சொத்துடன் கெத்து காட்டும் பாஜக அமைச்சர்!
இதை அடுத்து அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயிடம் நேரிலும் அவர் ஆஜராகியுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவரின் மகனுக்கு ரூ.881 கோடி கடனா? அதிர வைக்கும் காங். வேட்பாளரின் கடன் விவரங்கள்!!
இந்த நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அவருக்கு சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கர்நாடகா மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 3 அசையும் சொத்துக்கள் மற்றும் 1 அசையா சொத்துக்கள் அமலாக்கத்துறை சார்பில் முடக்கப்பட்டு உள்ளன. குறிப்பிடத்தக்கது.