அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 5.0 ஆக பதிவாகியுள்ளது

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நில அதிர்வு மையம் தகவலின்படி, அட்சரேகை 9.32, தீர்க்கரேகை 94.03-யில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழப்புகள், மற்ற சேத விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதியன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், அடுத்த ஒருவாரதிற்குள்ளாகவே அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரை சந்திக்கும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்!

அதேபோல், ஃபிஜி தீவுகளிலும் நள்ளிரவு 1.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.