அந்தமான்- நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்கள் எந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள்.
நிகோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் பயத்தில் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
அந்தமான்- நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்கள் எந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். குறிப்பாக இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம் அந்தமான்- நிகோபார் தீவுகளில் அதன் தாக்கம் உணரப்படும்.
இதையும் படிங்க;- Makeup Disaster: மேக்கப் போட்டதால் அலங்கோலமான முகம்! திருமணத்தை நிறுத்திய மணமகன்!

இந்நிலையில், நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. தூக்கத்தில் இருந்த போது கட்டிடங்கள் குலுங்கியதை உணர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க;- தானாக ஸ்டார்ட் ஆகி கடைக்குள் நுழைந்த டிராக்டர்... இணையத்தில் வைரலான வீடியோ!!

அதேபோல், உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த மிதமான நிலநடுக்க அதிர்வுகளால் கட்டிடங்கள் குலுங்கின. ஆனால், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
