மத்தயஅரசின் ரூ.500, ரூ.1000 நோட்டு தடை உத்தரவையடுத்து, கேரள மாநிலத்துக்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை கடுமையாக பாதிக்கப்பட்டு, ஏறக்குறைய 55 நாட்களில் ரூ.ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது இது குறித்து கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்
கடக்கம்பள்ளி சுரேந்திரன்திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்தியஅரசு தடை செய்தபின், ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக மாநிலத்துக்கு வரும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஏறக்குறைய வெளிநாட்டு பயணிகள் வருகை 10 முதல் 15 சதவீதமும், உள்நாட்டு பயணிகள் 20 முதல் 30 சதவீதமும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக அரசுக்கு ரூ. ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், நவம்பர் 8-ந்தேதிக்கு முன்பாக கேரள மாநிலத்துக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. மாநிலத்தில் சுற்றுலா சீசன் தொடங்கும் பருவத்தில் ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டது. விமானநிலையத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு போதுமான இந்திய ரூபாய் வினியோகம் செய்யப்படவில்லை இதனால், வருகை பெருமளவு பாதிக்கப்பட்டது.
மத்தியஅரசின் அகம்பாவ குணத்தால், மாநில அ ரசால் எந்த விஷயத்தையும் செய்ய முடியவில்லை. சுற்றுலாபயணிகள் மிகக்குறைந்த அளவே செலவு செய்ததால், உள்ளூர் வியாபாரிகள், வர்த்தகர்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கேரளாவின் முக்கியமான ஆழப்புழாவில் உள்ள படகுவீடு சுற்றுலாத்தளம் முற்றிலும் கலையிழந்து சீரழிந்துவிட்டது. ஆனால், சுற்றுலாத்துறையை மீண்டும் சீராக்க தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:56 AM IST