இந்தியாவில் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 24ம் தேதி முதல் நேற்று வரை 21 நாட்களுக்கு முதற்கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் நேற்றுடன் நிறைவடையவிருந்த கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஒரு நாள் லீவு கிடைத்தால் கூட போதும் என்று தவம் கிடந்தவர்கள் கூட, தொடர்ந்து கிடைத்த இந்த 21 நாட்களில் பொழுபோக்க வழி தெரியாமல் தவித்தனர். 24 மணி நேரமும் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் பெரும்பாலானோர் சோசியல் மீடியா மூலம் பொழுது போக்கி வருகின்றனர். அதனால் ஆன்லைன் மூலம் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியான. 


வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நபர்களில் பெரும்பாலானோர் தங்களது வீட்டு பெண்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாகவும், சாதாரண நாட்களை விட ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாகவும் வேதனை அளிக்கும் தகவல்கள் வெளியானதை பார்த்தோம். இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் ஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஆபாச இணையதளங்களை முடக்கியுள்ளது. மாநில அரசுகளும் ஆபாச வீடியோக்களை உருவாக்குவோர் மற்றும் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஆபாச வலைத்தளங்களை நடத்துவோர் புது புது பெயரில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். 


இதையும் படிங்க: வெளிநாட்டில் இருக்கும் விஜய் மகனின் தற்போதைய நிலை என்ன?... உண்மை நிலவரம் இதுதான்...!

அதன்படி சென்னை உள்ளிட்ட 100 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான  மார்ச் 24ம் தேதியும், அதற்கு பிந்தைய இரண்டு நாட்களிலும் (25,26) ஆபாச வீடியோக்களை பார்ப்போரின் எண்ணிக்கை 96 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆபாச இணையதளங்களை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 21 நாட்கள் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது ஆபாச வீடியோக்களை பார்ப்போரின் எண்ணிக்கை 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.