நண்பரிடம் வாங்கிய ரூ.40 லட்சத்தை கொடுக்க முடியாத நபர் ஒருவர், கடன் கொடுத்த நண்பரையே துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பரிடம் வாங்கிய ரூ.40 லட்சத்தை கொடுக்க முடியாத நபர் ஒருவர், கடன் கொடுத்த நண்பரையே துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த ஹர்னேக் சிங் என்பவர், தமது நண்பர் ஜாஸ்கரன் சிங்கிடம் வியாபாரத்திற்காக ரூ.40 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பித் தரும்படி ஜாஸ்கரன் சிங் பலமுறை கேட்டும், பணத்தை கொடுக்காததால், ஹர்னேக் சிங்கின் வீட்டுக்கு கடந்த அக்டோபர் 14ம் தேதி ஜாஸ்கரன் சிங் நேரில் சென்று வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டுள்ளார்.

இதனால், அவமானமடைந்த ஹார்னேக் சிங், ஜாஸ்கரனை சாமர்த்தியமாக பேசி வீட்டுக்குள் அழைத்து தமது மனைவி குர்மெஹர் கவுரின் உதவியுடன் கட்டி வைத்து கொலை செய்துள்ளார். பின்பு ஜாஸ்கரன் சிங்கின் உடலை 25 துண்டுகளாக வெட்டி, இரண்டு பிளாஸ்டிக் பைகளில் கட்டுக்கொண்டு தங்கள் சொந்த ஊரான லூதியானாவுக்குப் புறப்பட்டுள்ளனர்.

லூதியானாவுக்குச் செல்லும் வழியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் உடல் துண்டுகளை வீசியுள்ளனர். மீண்டும் குர்கானுக்கு திரும்பிய பின்னர், ஹர்னேக் சிங்கிற்கு காவல்துறை தங்களை பிடித்து விடும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மனைவி குர்மெஹரிடம், இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற கூறியுள்ளார்.

முதலில் தற்கொலைக்கு ஒப்புக்கொண்ட மனைவி குர்மெஹர் கவுர், பின்னர் மனம்மாறி, தற்கொலைக்கு மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஹார்னேக் சிங், கடந்த 22ம் தேதி, தமது மனைவி குல்மெஹரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். தம் மீதும் காயம் ஏற்படுத்திக்கொண்ட ஹர்னேக் சிங், கொள்ளையர்கள் தம் மனைவியை கொன்று, தம்மை காயப்படுத்தி, வீட்டை கொள்ளையடித்து விட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையிடம் கூறியுள்ளார்.

மனைவியை கொன்ற கொள்ளையர்கள், இவரை காயப்படுத்தியதோடு ஏன் விட்டு விட்டார்கள் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்த விசாரணையில் தம் மனைவியை கொலை செய்ததை ஹர்னேக் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, ஹார்னேக் சிங்கை கைது செய்த போலீசார், ஜாஸ்கரன் உடல் பாகங்களை தேடி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.