Rewa MP: மது குடிங்க,சிகரெட் பிடிங்க,புகையிலை மெல்லுங்க! நீர் சேமிப்பு குறித்து பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு

மது குடிங்க, சிகரெட் பிடிங்க, புகையிலை சாப்பிடுங்க எனக்கு கவலையிலை. தண்ணீரை சேமியுங்கள் என்று மத்தியப்பிரதேச எம்.பி. ஜனார்த்தன் மிஷ்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Drink drink, smoke cigarettes! : BJP MP Janardan Mishra on water conservation

மது குடிங்க, சிகரெட் பிடிங்க, புகையிலை சாப்பிடுங்க எனக்கு கவலையிலை. தண்ணீரை சேமியுங்கள் என்று மத்தியப்பிரதேச எம்.பி. ஜனார்த்தன் மிஷ்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய விஷயங்களைச் செய்வதும், பேசுவதையும் எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த செப்டம்பர் மாதம், பள்ளிக்கூடத்தில் கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்து ஜனார்த்தன் தலைப்புச் செய்திகளில் வைரலாகினார். இந்த முறை, நீர் சேமிப்புக் குறித்துப் பேசியது வைரலாகியுள்ளது. 

கியான்வாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி வழக்கு:வாரணாசி நீதிமன்றம் ஒத்திவைப்பு

ரேவா நகரில் நீர் சேமிப்பு குறித்த கருத்தரங்கம் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா பங்கேற்றார். அப்போது அவர் நீர் சேமிப்புக் குறித்து பேசியதுதான் வைரலாகியுள்ளது. 

அவர் பேசுகையில் “ ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் குறைந்துகொண்டே செல்கிறது. இதற்கு மாற்று ஏதுமில்லை. நாம் ஏராளமான தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். நாம் பணம் செலிவிடும்போதுதான் இது குறையும். நீங்கள் மதுகுடித்தாலும், சிகரெட்  புகைத்தாலும், புகையிலை சாப்பிட்டாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை மட்டும் உணர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தேர்தல் என்னமோ 2 மாநிலங்களில்; ஆனா தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் அள்ளிய நன்கொடை ரூ. 545 கோடி!!

இதேபோல கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது ரேவா தொகுதியில் உள்ள கட்காரி நகரில் உள்ள ஒரு மகளிர் பள்ளிக்கூடத்துக்குச் சென்ற எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா, அங்குள்ள கழிவறையை வெறும் கைகளில் சுத்தம் செய்தார். இந்த செயல் வைரலானது. அப்போது பேசிய ஜனார்த்தன் மிஸ்ரா “ அனைவரும் சுத்தமாக இருக்க வேண்டும். மகாத்மா காந்தி முதல் பிரமதர் மோடிவரை சுத்தமாக இருப்பதை வலியுறுத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios