மார்ச் மாதம் வரை அயோத்தி ராமர் கோயிலுக்குப் போகாதீர்கள்: அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதம் வரை அயோத்திக்குச் செல்லும் தங்கள் திட்டத்தைத் தள்ளிப்போடுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.
வரும் மார்ச் மாதம் வரை அயோத்தியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் தனது அனைத்து அமைச்சரவை சகாக்களையும் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாக அரசுக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், விஐபிகள் வருகையை முன்னிட்டு செய்யப்படும் ஏற்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கவும் மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதம் வரை அயோத்திக்குச் செல்லும் தங்கள் திட்டத்தைத் தள்ளிப்போடுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.
65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்து
செவ்வாய்க்கிழமை கோயில் திறக்கப்பட்டபோது சுமார் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் அயோத்தி நோக்கி செல்லும் பேருந்துகளை தற்காலிகமாக திருப்பிவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. புதன்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே தரிசனத்துக்காகக் காத்திருந்தனர்.
இதனிடையே, அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். பின்னர், கோயிலுக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்கள் தங்கள் வருகையை முன்கூட்டியே அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.
விஐபிகள் தங்கள் வருகை குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே மாநில அரசு அல்லது ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவிக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
அயோத்தி ராமர் சிலையைச் செதுக்க பயன்படுத்திய அபூர்வ கருங்கல்!