65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்து
"மாஸ்கோ நேரப்படி காலை 11 மணியளவில் பெல்கோரோட் பகுதியில் ஒரு IL-76 விமானம் விபத்துக்குள்ளானது" என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
65 உக்ரேனிய போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற IL-76 என்ற ரஷ்ய ராணுவ விமானம் உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யா கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பான உறுதிபடுத்தப்படாத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. பெல்கோரோட் பிராந்தியத்தில் ஒரு பெரிய விமானம், விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரியும் காட்சியை அந்த வீடியோக்களில் காணமுடிகிறது.
"மாஸ்கோ நேரப்படி காலை 11 மணியளவில் பெல்கோரோட் பகுதியில் ஒரு IL-76 விமானம் விபத்துக்குள்ளானது" என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
48,500 ஆண்டுகள் பழமையான Zombie வைரஸ்கள்.. மனித இனத்திற்கே பேராபத்து.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை..
"கப்பலில் பிடிபட்ட 65 உக்ரேனிய ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு, இடமாற்றம் செய்வதற்காக பெல்கோரோட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் இருந்தனர்" என்றும் ரஷ்யா தரப்பில் கூறப்படுகிறது.
விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன என்று உடனடியாகத் தகவல் ஏதும் தெரியவில்லை.
பெல்கோரோட் தலைநகரின் வடகிழக்கில் உள்ள கொரோசான்ஸ்கி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என அந்தப் பிராந்திய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்திருக்கிறார்.
"ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகளும் தளத்தில் வேலை செய்து வருகின்றன. நான் எனது இதர பணிகளை ஒத்திவைத்துவிட்டு, விபத்து நடந்த இடத்திற்குச் அங்கு செல்கிறேன்" என்றும் கிளாட்கோவ் கூறியுள்ளார்.
உக்ரைன் தரப்பில் இந்த விபத்து குறித்து உடனடியாக எந்த அதிகாரபூர்வ எதிர்வினையும் வரவில்லை.