ராஜீவ் காந்தி ஆட்சியில் இந்தியாவில் ஊடுருவிய சீனா..அன்றே கணித்த கிருஷ்ணசாமி சுந்தர்ஜி - யார் இவர்?

சில நாட்களுக்கு முன்பு 'A tambram & THE PEKING SOUP' என்ற தலைப்பில் ஒரு செய்தியானது அனைத்து வாட்சப் மற்றும் சமூக ஊடகங்களில் பரவியது.

Do you know why trending A TAMBRAM & THE PEKING SOUP

அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ராஜீவ் காந்தி அரசு விமர்சனத்துக்கு உள்ளானது பற்றியும், அந்தக் கால நிகழ்வுகளின் நிகழ்வுகளை மேலும் தெளிவுபடுத்தும் நோக்கிலும் பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தது.

அது 1986ம் ஆண்டின் கோடைக்காலம். ராஜீவ் காந்தி 2 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது, அவர்கள் பெற்ற அனுதாப வாக்குகளின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் சூழ்நிலையிலும் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது. 1984 இல் இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு, மந்தமாக இருந்த பொருளாதாரம் படிப்படியாக முன்னேறத் தொடங்கியத்து சுமார் 5% ஆக பொருளாதாரம் வளர்ந்தது. இந்திய நாட்டின் மனநிலை அப்போது மெல்ல மெல்ல உற்சாகமாக உணர தொடங்கிய நேரம்.

ஆனால் அப்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த போஃபர்ஸ் ஊழல் ராஜீவ் காந்தி அரசுக்கு அவதூறை ஏற்படுத்தியது. மே 2, 1986 அன்று காலை, புது தில்லி ராணுவத் தலைமையகத்தில் உள்ள ராணுவ நடவடிக்கை இயக்குநரகத்தில் ஒரு தொலைபேசி ஒலித்தது. அது சாதாரண தொலைபேசி அழைப்பு அல்ல. நேரடி உளவுத்துறையினரிடம் வந்த அந்த தொலைபேசி அழைப்பில் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தியப் பகுதியை சீனர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், 1962ல் நடந்ததை போலவே மிகப்பெரிய போருக்கு தயாராகி வருவதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க..கடைசி நேரத்தில் ரத்து.. பிடிஆருக்கு நோ சொன்ன முதல்வர் - உண்மையை போட்டு உடைத்த சவுக்கு சங்கர்.!

Do you know why trending A TAMBRAM & THE PEKING SOUP

இந்த தகவல் அப்போது ராணுவ தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் கிருஷ்ணசாமி சுந்தர்ஜிக்கு தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணசாமி சுந்தர் வித்தியாசமான தலைவராக இருந்தார். முதல் தலைமுறை ராணுவ அதிகாரியான அவர், இயற்பியல் பேராசிரியரின் மகன் ஆவார். எம்பிபிஎஸ் படிப்பை விட, தான் ஒரு துணிச்சலான நபர் என்று தனது தந்தைக்கு நிரூபிக்க ராணுவத்தில் சேர்ந்தார். அவர் ஒரு தைரியமான மனிதர் மற்றும் அறிவுஜீவி என்ற நற்பெயரை பெற்றிருந்தார்.. சிறிதும் தாமதிக்காமல், உடனடியாக செயலில் இறங்கினார். அருணாச்சலப் பிரதேசத்தில் தியாக் லா மலைத்தொடரை சீனர்கள் ஆக்கிரமித்திருந்தனர். மேலும் தவாங் பகுதியையும் இந்திய ராணுவத்திடம் கோரினர்.

உடனடியாக பின்வாங்கி, இந்திய அரசாங்கம்  சீனாவிடம் அருணாச்சலப் பிரதேசத்தை ஒப்படைத்தது.. இந்திய அரசின் இந்த முடிவு அபத்தமானது என்று சுந்தர்ஜி கருதினார். அவர் உடனடியாக மேஜர் ஜெனரல் ஜே.எம். சிங்கின் கீழ் 17வது மலைப் பிரிவை அருணாச்சல பிரதேசத்திற்கு மாற்றினார். இந்திய ராணுவத்தின் 33 பட்டாளம் அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றது. 

4 மாதங்களாக, இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் நொடி பொழுது கூட கவனம் சிதறாத வகையில் வேலை பார்த்தனர். டெல்லி அரசோ இதைப்பார்த்து பதற்றமடைந்தது. 

குளிர்காலம் தொடர்ந்தது, புது டெல்லியில் உள்ள அரசியல்வாதிகள் பதற்றமடைந்தனர்.  சாலைகள் ஏதும் இல்லாத நிலையில், இந்திய ராணுவம் கோவேறு கழுதைகளை பயன்படுத்தியது. சீனர்கள் அனைத்து வானிலை சூழல்களில் சிறந்து விளங்கியதால், இது நீண்ட காலத்திற்கு சாத்தியமானதாக இருக்காது என்று மேஜர் ஜெனரல் ஜே.எம். சிங் தெரிவித்தார்.. மேலும் அருணாச்சல பிரதேசத்தில் உள்கட்டமைப்பு நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டது. குளிர்காலம் முடிந்து, இந்தியாவுக்கு இன்னொரு பாடம் கற்பிக்க சீனர்கள் தயாராகி வந்தனர். 1987ல் வசந்த காலம் வந்தது. ஆனால் எல்லையில் மோதல் தொடர்ந்தது.

சூழல் பதற்றமாக இருந்தது. இந்த சூழலில் ஜெனரல் சுந்தர்ஜி முதல் நகர்வை மேற்கொண்டார்.Mi-17 ரஷ்ய ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பழைய Mi-8she 3 படைப்பிரிவுகளை (10,000 துருப்புக்கள்) ஒரே இரவில் விமானத்தில் ஏற்றி அனுப்பினார்.. இதனால் சீனர்களின் எண்ணிக்கையை இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்திய துருப்புக்கள் மலை உச்சியில் அரணான நிலைகளுக்குள் அமர்ந்து கீழே உள்ள சீனத் துருப்புக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சீனர்களின் தளவாடங்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த விநியோக வழிகள் துண்டிக்கப்பட்டன. உண்மையில் நிலைமை மிகவும் மோசமானது.. இதனால் சீன ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கினர். இதனால் சீனர்கள் கோபமடைந்தனர். சீனர்கள் எதிர்வினையாற்றுவதற்கு முன், சுந்தர்ஜி மீண்டும் தாக்கினார்.

தென்னிந்தியாவை தளமாகக் கொண்ட மற்றொரு காலாட்படை பிரிவை அருணாச்சல பிரதேசத்தின் நம்கா சூ பள்ளத்தாக்கிறகு மாற்றினார். 1962 ஆம் ஆண்டில், இந்திய இராணுவம் சீன ராணுவத்தால் மோசமாக தோற்கடிக்கப்பட்டது. மேலும் நம்கா சூ பள்ளத்தாக்கை சீனர்கள் ஆக்கிரமித்தனர். ஆனால் தற்போது நம்கா சூ பள்ளத்தாக்கு மட்டுமின்றி அதனை சுற்றியிருந்த பகுதிகளையும் இந்திய ராணுவம் மீட்டது.. சீனர்கள் அப்போது இந்தியாவை பார்த்து மிகவும் பயந்தனர். 

இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்

Do you know why trending A TAMBRAM & THE PEKING SOUP

ஆனால் இவை எல்லாமே ராஜீவ் காந்திக்கு தெரியாமல் நடந்தது. ஆனால் இந்த சூழல் சிக்கலானது தெரிந்தும், ராஜீவ் காந்தி . கோபடைந்தார்.. ஜெனரல் சுந்தர்ஜி பிரதமர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். சீனர்களை கையாள்வதற்கான திட்டங்களைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது,  திபெத் ரிட்ஜ் லைனில் சுமார் 10,000 சதுர கிலோமீட்டர் பரப்பை ஆக்கிரமிக்க ராணுவம் தயாராக இருந்தது. இறுதியில் சீன ராணுவம், 1962-க்கு முந்தைய நிலைக்கு தள்ளப்பட்டது. சுந்தர்ஜி இந்த வார்த்தைகளை சொன்னதும்  அறையில் நீண்ட அமைதி நிலவியது. ராஜீவ் காந்தி திகைப்புடன் அவரைப் பார்த்தார்.

சுந்தர்ஜி பிரதமர் ராஜீவ் காந்தியால் கண்டிக்கப்பட்டார். இந்த பணிகளில் பின்வாங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். சுந்தர்ஜி தனது விரும்பாமல் அதை செய்தார். எனினும் இந்தியா ஒரு பொன்னான வாய்ப்பை இழந்து வருவதாகவும், எதிர்காலத்தில் அதற்கு நாடு நிச்சயம் அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்றும் சுந்தர் ஜி கூறியதை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரிடம் கூறியதை அவரது ராணுவ இயக்க இயக்குனரக ஊழியர்கள் நினைவு கூர்ந்தனர். அவர் கூறியது போலவே 2017 இல் அது உண்மையாக மாறியது. இப்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 'ஜெனரல் சுந்தர்ஜி சொன்னது சரியா' என்பதுதான் கேள்வி. அதற்கு ஆம் என்பதே பதில். ஒரு நாடாக இன்றும் நாம் அதற்கான விலையை கொடுத்து வருகிறோம்.

சுந்தர்ஜி சீனாவோடு மட்டும் நின்றுவிடவில்லை. 1987ல் ராஜஸ்தான் எல்லையில் (எக்ஸ்-பிராஸ்டாக்ஸ்) 5 லட்சம் துருப்புகளை உள்ளடக்கிய ஒரு பயிற்சியை நடத்தி முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியாவை பயமுறுத்தினார். பாகிஸ்தான் அணுசக்தி நாடாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக வாதிட்ட முதல் இந்திய ராணுவத் தளபதியும் சுந்தர் ஜி தான். அவர் அணு ஆயுதச் சோதனைகளை நடத்துவதற்கு ஆதரவாக இருந்தார். உண்மையில் 1998 பொக்ரான் சோதனைகள் அவர் 1988 இல் வகுத்த திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை.

சுந்தர்ஜியின் திறமையால் ஈர்க்கப்பட்ட சீன ராணுவ மார்ஷல் 1993 இல் அவரை சீனாவுக்கு அழைத்தார். பெய்ஜிங்கில், பிஎல்ஏவின் மார்ஷல், அப்பாவியான முகத்துடன் சுந்தர்ஜியிடம் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, ஜெனரல், "ஒரு இந்தியனாக நான், சீனாவின் பிரபலமான பீக்கிங் சூப் குடிக்க விரும்புகிறேன்" என்று பதிலளித்தார், அதாவது அவர் சீனர்களை எளிதில் சமாளித்து கணிக்க முடியும் என்ற நோக்கில் சுந்தர் இந்த பதிலை அளித்தார். ஆனால் சிவந்த முகத்துடன் இருந்த சீன ராணுவ மார்ஷல் புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தார். ஆனாலும், ஜெனரல் சுந்தர்ஜி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிராக நின்றதால், காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் இன்றும் இழிவுபடுத்தப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய மனிதராகவே இருக்கிறார் என்பதே கசப்பான உண்மை.

இதையும் படிங்க..குடும்பத்தினர்களுக்கு மட்டும் டெண்டர்! இலவச லேப்டாப் குளறுபடி.! அதிமுக ஆட்சி பற்றி சிஏஜி அதிர்ச்சி தகவல்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios