கடைசி நேரத்தில் ரத்து.. பிடிஆருக்கு நோ சொன்ன முதல்வர் - உண்மையை போட்டு உடைத்த சவுக்கு சங்கர்.!
முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடியை குவித்துள்ளனர் என்று அமைச்சர் பிடிஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வைரலாகி வருகிறது.
திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி வீடியோ பதிவாக வெளியிட்டார். இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சையது ஜாபர் இஸ்லாம், டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக நிதி அமைச்சர், செய்தியாளர் ஒருவரிடம் பேசியுள்ளார். அந்த ஆடியோ அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடியை குவித்துள்ளனர். இதை நான் கூறவில்லை. தமிழக நிதித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
அந்த பணத்தை எங்கு, எப்படி பதுக்குவது என்பது அவர்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. இங்கிலாந்தில் 2 நிறுவனங்களை சபரீசன் தொடங்கியுள்ளார். முறைகேடாக சுருட்டிய பணத்தை முதலீடு செய்வதற்காகவே இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஓராண்டில் இவ்வளவு பெரிய தொகையை குவித்தது எப்படி என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. இது, சாமானிய மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம். மக்கள் நலனுக்காக செலவிடப்பட வேண்டிய பணம். இந்த பணத்தை தமிழக முதல்வர், அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சட்டத்துக்கு விரோதமாக கொள்ளையடித்து உள்ளனர்.
ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடி ஊழலுக்கு எதிராக அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மறுபுறம் திமுக அதிதீவிரமாக ஊழலில் ஈடுபட்டு வருகிறது” என்று அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இந்த விஷயம் ஒருபுறம் பூதாகரமாக மாறியுள்ளது. இந்த நிலையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க..குடும்பத்தினர்களுக்கு மட்டும் டெண்டர்! இலவச லேப்டாப் குளறுபடி.! அதிமுக ஆட்சி பற்றி சிஏஜி அதிர்ச்சி தகவல்.!
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “நான் பேசியதாக பகிரப்படும் இந்த ஆடியோக்கள் தீயநோக்கத்துடன் ஜோடிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற ஆடியோக்களை தொழில்நுட்ப உதவியால் யார் வேண்டுமானாலும் தற்போது உருவாக்க முடியும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஒருபோதும் நான் பதிலளிப்பது இல்லை. ஆனால், இந்த முறை பதில் அளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
தார்மீக கொள்கைகள் ஏதும் இல்லாத நேர்மையற்ற அரசியல்வாதிகளால் இந்த ஆடியோ திரும்ப திரும்ப பரப்பி பெரிதுப்படுத்தப்பட்டு விட்டது. பொது வாழ்க்கையில் நான் செய்த அனைத்தும், என் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினால் தான். எங்களை பிரிப்பதற்கான எந்த முயற்சிகளும் ஒருபோதும் வெற்றி பெறாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நிதியமைச்சர் பி.டி.ஆரின் வீட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பட்ஜெட் விருந்து கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு விருந்து நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பி.டி.ஆர் வீட்டில் நடந்த விருந்தில் பங்கேற்க முதல்வர் மற்றும் அவரது மகன் இருவரும் அக்கறை காட்டாததைத் தொடர்ந்து கடைசி நிமிடத்தில் இரவு உணவு ரத்து செய்யப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்