Leila Kabir and George Fernandes Marriage Life Story : லீலா கபீர் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இடையிலான காதல் உருவான கதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Leila Kabir and George Fernandes Marriage Life Story : இந்திய அரசியல்வாதி மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முன்னால் காவல் துறை அதிகாரியான ஹூமாயூன் கபீர் மற்றும் சமூக ஆர்வலரான சாந்தி தாஸ்குப்தாவின் மகள் தான் லீலா. இவர் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளார். படித்து முடித்த பிறகு செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாற்றினார். நாளடைவில் மங்களூர் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜார்ஜ், தீப்பறி தொழிற்சங்க தலைவராக இருந்தார். லீலா கபீர் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இடையிலான காதல் கடந்த 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொல்கத்தா மற்றும் டெல்லி விமானத்தில் தொடங்கியது. குடும்பத்தை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்ச்சியில் இந்திரா காந்தி கலந்து கொண்டார். இவர்கள் இருவரும் தங்களது நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்தனர்.

கடந்த 1974 ஆம் ஆண்டு ரயில்வே வேலை நிறுத்தம் செய்யப்பட்ட போது ஜார்ஜ் தலைமறைவு வாழ்க்கையில் அவருக்கு பக்க பலமாக லீலா இருந்துள்ளார். இவ்வளவு ஏன் ஜார்ஜ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு அவரது விடுதலைக்காக அமெரிக்க காங்கிரசுக்கு முன் சாட்சியளித்தார். இதையடுத்து லீலாவிற்கு ஷேன் என்ற ஆண் குழந்தை பிறந்த பிறகு அவர் அமெரிக்காவிற்கு சென்றார். தொடர்ந்து ஜார்ஜிற்கு ஆதரவாக செயல்பட்ட நிலையில் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 1977 ஆம் ஆண்டு தேர்தலில் லீலா வெற்றி பெற்றார். அவரது இடைவிடாத பிரச்சாரம், பணிவு மற்றும் விடாமுயற்சி ஆகியவை அவருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. ரயில்வே பட்ஜெட் உரையின் போது ஜார்ஜின் செயலாளரான சஞ்சல் அவரது நகைச்சுவை உணர்வை நினைவு கூர்ந்தார்.

ஜார்ஜ் தனது அமைச்சரவைக் காலத்தின் போது ஜெயா ஜெட்லியுடன் நெருக்கமாக இருந்ததைத் தொடர்ந்து ஜார்ஜ் மற்றும் லீலாவின் திருமண வாழ்க்கை முறிந்தது. எனினும் லீலா எந்தவித ஆடம்பரமும் செய்யவில்லை. ஜார்ஜிற்கு எதிராக புகாரும் அளிக்கவில்லை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்ஜ் மற்றும் லீலா இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ஜார்ஜிற்கு அல்சைமர் பாதிப்பு ஏற்பட்ட போது கடந்த ஜனவரி 2019 ல் அவர் இறக்கும் வரையில் அவருக்கு ஆதரவாகவே லீலா இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் லீலாவும் தனது இறுதி நாளை எட்டினார். லீலா இந்திய மனைவி மட்டுமின்றி கல்வி மற்றும் உலகளாவிய அனுபவம் அவரிடம் இருந்தது. இந்த கதை அவரது அரசியல் திருமணத்தை பற்றிய கதை மட்டுமின்றி உண்மை, விசுவாசத்தின் விலை, அமைதியின் வெளிப்பாடு, தனிமை வாழ்க்கை ஆகியவற்றை கொண்ட கதை ஆகும்.