Asianet News TamilAsianet News Tamil

புதுவை திமுக தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்; ஆளுநரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

புதுச்சேரி மின்துறை தனியார் மயக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுச்சேரியில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தின்போது அவ்வழியாக வந்த ஆளுநர், முதலவர் முற்றுகையிடப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 

dmk alliance parties held human chain protest in puducherry
Author
First Published Oct 2, 2022, 5:32 PM IST

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதால் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை துவக்கியுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் மின்துறையில் பணியாற்றும் 2 ஆயிரம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வேலைநிறுத்தம் செய்த மின் ஊழியர்கள் புதுச்சேரி சோனாம்பாளையம் தலைமை அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக 4-வது நாளாக தரையில் அமர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மின்துறை தனியார் மயமாக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைதி பூங்காவான புதுச்சேரியில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

சென்னை மாநகராட்சியில் ரூ.945 கோடி வரி வசூல்; கடந்த ஆண்டை விட 345 கோடி கூடுதல் வசூல்

திமுக தலைமையில் காமராஜர் சிலை முதல் அண்ணாசிலை வரை நடக்கும் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணிகள்,  சமூக அமைப்புகள் என 1000-த்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலையின் இருபுறமும் நின்று ஒன்றிய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் ட்ராக்டர் கவிழ்ந்து 27 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம் !

அப்போது காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வந்தனர். அப்போது மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆளுநர் மற்றும் முதலமைச்சரை முற்றுகையிட முயன்றனர். அப்போத அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் ஆளுநரையும், அரசையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios