காலை சரி செய்வதற்காக, மாற்றுத்திறனாளி ஒருவரை, நெருப்பின் மீது தலைகீழாக கட்டி தொங்கவிட்ட சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.  ஒடிசா மாநிலம், கந்தமல் மாவட்டத்தில் பலிகுடா என்ற இடத்தில் மஹமாயி கோயில் பூசாரி ஒருவர், மாற்றுத்திறனாலியைக் குணப்படுத்துவதாக கூறி, நெருப்பின் மீது தலைகீழாக கட்டி தொங்கவிட்டார்.

தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் பவானி சங்கர் கையில் சூலம் வைத்திருந்தார். பவானி சங்கர் முகத்தின் மீது நெருப்பின் புகை படும் வகையில் ஊஞ்சலை பூசாரி ஆட்டி விட்டார்.

பவானி சங்கர் மீது, ஒரு பூசாரி, விபூதியை அள்ளி வீசினார். இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்த நிலையில், ஒரு கட்டத்தில் நெருப்பின் தகிப்பு தாங்காமல், பவானி சங்கர், கீழே விழ இருந்தார். பவானி சங்கர் கீழே விழுந்ததில் முகம் மற்றும் மார்பு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, பவானி சங்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

மாற்றுத்திறனாளியை குணமாக்குவதற்கு நெருப்பின் மீது தலைகீழாக கட்டி தொங்கவிட்ட இந்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.