'மகாதேவ் பெயரைக் கூட விட்டு வைக்கவில்லை': சூதாட்ட செயலி சர்ச்சையில் காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி..
சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்திற்கு, சட்டவிரோத சூதாட்ட செயலிகளை கொண்டு வந்த ஹவாலா பணத்தை காங்கிரஸ் பயன்படுத்துகிறது என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
சூதாட்ட செயலி சர்ச்சையில் சத்தீஸ்கர் முதல்வர் முதல்வர் பூபேஷ் பாகேலின் பெயர் அடிபடும் நிலையில், காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று கடுமையாக சாடினார். சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்திற்கு நிதியளிப்பதற்காக சட்டவிரோத சூதாட்ட செயலிகளை கொண்டு வந்த ஹவாலா பணத்தை காங்கிரஸ் பயன்படுத்துகிறது என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
துர்க்கில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "நாங்கள் சொல்வதை செய்வோம் என்பது பாரதிய ஜனதா கட்சியின் சாதனை. சத்தீஸ்கர் பாஜகவால் உருவாக்கப்பட்டது, சத்தீஸ்கரை பாஜக வடிவமைக்கும் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். ஆனால் காங்கிரஸ் 'சங்கல்ப் பத்ரா', ஊழல் மூலம் தனது கஜானாவை நிரப்புவதே காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி மேலும் பேசிய போது , "காங்கிரஸ் கட்சியினர் 'மகாதேவ்' பெயரை கூட விட்டு வைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன், ராய்பூரில் பெரிய ஆபரேஷன் நடந்தது. பெரிய அளவில் கரன்சி நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டது. அந்த பணம் சூதாட்டக்காரர்களுக்கும், பந்தயம் வைப்பவர்களுக்கும் சொந்தமானது என்று மக்கள் கூறுகிறார்கள். இந்த கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வீடுகளை நிரப்புகின்றனர்.. இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட துபாயில் அமர்ந்திருப்பவர்களுடன் சத்தீஸ்கர் மக்களுக்கு என்ன தொடர்பு உள்ளது என்பதை மாநில அரசும், முதலமைச்சரும் சொல்ல வேண்டும்.
என்னை திட்டுவது மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வேலையாக உள்ளது. ஆனால் முதல்வர் இப்போது நாட்டின் புலனாய்வு அமைப்புகளையும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார். ஆனால் சத்தீஸ்கர் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், முறைகேடுகளுக்கு மோடி பயப்படுவதில்லை. ஊழல்வாதிகளை சமாளிக்க மோடியை டெல்லிக்கு அனுப்பியுள்ளீர்கள். ," என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "சத்தீஸ்கரில் கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு அவர்களிடம் இருந்து எடுக்கப்படும். சத்தீஸ்கரின் ஊழல் அரசாங்கம் ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் நம்பிக்கையை உடைத்துவிட்டது... நான் உறுதியளிக்கிறேன். மீண்டும் ஒருமுறை, மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, இதுபோன்ற ஊழல்கள் குறித்து கடுமையாக விசாரிக்கப்பட்டு, உங்களைக் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் முதல்வர் பூபேஷ் பாகேலை விமர்சித்து பேசினார், அப்போது “ பூபேஷ் பாகல் ரூ. 500 கோடிக்கு மேல் பணம் பெற்றதாக குற்றம் சாட்டினார். மகாதேவ் பந்தய செயலி விளம்பரதாரர்கள் பாகேலுக்கு சுமார் 508 கோடி ரூபாய் கொடுத்ததாக "திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளான. நமது தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இதுபோன்ற ஆதாரங்களை மக்கள் பார்த்ததில்லை..” என்று அவர் தெரிவித்தார்.
நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி தன்னைக் குறிவைப்பதாக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி தனது முதலமைச்சரை ஆதரிப்பதாகவும், தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
- Bhupesh Baghel
- Bhupesh Baghel betting allegations
- Bhupesh Baghel betting charges
- Chhattisagrh
- Chhattisgarh Chief Minister Bhupesh Baghel
- Chhattisgarh Durg
- Chhattisgarh assembly elections
- Chhattisgarh elections
- Chhattisgarh polls
- PM Modi
- PM Modi Chhattisgarh election rally
- PM Modi latest news
- PM Modi rally in Chhattisgarh
- mahadev betting app