Air India Urination:ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்:சிறுநீர் கழிப்பு விஷயத்தில் டிஜிசிஏ அதிரடி
நியூயார்க்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் அந்த விமானத்தின் பைலட்டின் லைசன்ஸை 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தும் டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. இதில் மூதாட்டி ஒருவர் மீது சங்கர் மிஸ்ரா என்ற பயணி ஒருவர் மது போதையில் சிறுநீர் கழித்தார்.
ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பை சங்கர் மிஸ்ரா கைது
இந்த விவகாரம் தொடர்பாக அந்த மூதாட்டி, கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த சம்பவத்தில் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அந்த பெண் பயணியிடம் சமாதானம் பேச முயன்று தோல்வி அடைந்தது.
இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து, கடந்த 4ம்தேதிதான் போலீஸில் புகார் அளித்ததது. இதன்பின்புதான் சம்பவம் வெளிச்சத்துக்கும் வந்தது.
இதையடுத்து, டெல்லி போலீஸார் பெண் பயணி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா மீது ஐபிசி 294, 509, 510 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அகமதாபாத்தில் கைது செய்தனர்.
பெண் பயணிக்கு அவமதிப்பு: ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்புக் கோரினார்
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சங்கர் மிஸ்ரா, பணியாற்றிய அமெரிக்க நிதிச் சேவை நிறுவனமான வெல்ஸ் பர்கோ அவரை வேலையிலிருந்து நீக்கியது. வெல்ஸ் பர்கோ நிறுவனத்தின் துணைத் த லைவராக சங்கர் மிஸ்ரா இருந்தார்.
இந்த விவகாரத்தை மோசமாகக் கையாண்டதற்காக ஏர் இந்தியா தலைவருக்கு எச்சரிக்கை நோட்டீஸை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுப்பியது.இந்தசம்பவத்தில் ஏர் இந்தியா நிறுவனம் கடமையைச் செய்யத் தவறியதற்காக ஏர் இந்தியா இயக்குநருக்கு ரூ. 3லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ ஏற்கெனவே உத்தரவி்ட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் பெண் பயணி மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த பயணி சங்கர் மிஸ்ராவுக்கு 4 மாதங்கள் விமானத்தில் பறக்கத் தடை விதித்தது ஏர் இந்தியா. ஏற்கெனவே 30 நாட்கள் தடை இருந்தநிலையில் கூடுதலாக 4 மாதங்கள் விதிக்கப்பட்டது.
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கு.. நான் அவன் இல்லை.! நீதிமன்றத்தில் பரபரப்பு
இந் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா மேலாளருக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியிருந்தது. இந்த சம்பவம் நடந்தபோது பைலட்கள், ஊழியர்கள் ஏன் சிறுநீர் கழித்த பயணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டிருந்தது. அதற்கு ஏர் இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ரா, தான் சிறுநீர் கழிக்கவில்லை என்றும், அந்த மூதாட்டி தானே சிறுநீர் கழித்துக்கொண்டார் என்று விளக்கம் அளித்தார்.
இந்தக் குற்றச்சாட்டை அந்த பெண் பயணி முற்றிலுமாக மறுத்ததோடு, தன்னை இழிவுபடுத்துவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் டிஜிசிஏ இன்று பிறப்பித்த உத்தரவில், "ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதமும், நியூயார்க்-டெல்லி விமானத்தை இயக்கிய பைலட்டின் லைசன்ஸை 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தும் " உத்தரவி்ட்டது
- Air India
- Air India Pee Incident
- Air India Urination
- Air India Urination Incident
- Air India fined
- DGCA
- Shankar Mishra
- Tata Group Chairman N Chandrasekaran
- Urination Incident
- air india business class
- air india fine
- air india first class
- air india flight
- air india flight 182
- air india flights
- air india latest news
- air india news
- air india penalty
- air india story
- dgca fines air india
- fine on air india
- fined air india
- india
- india news live
- new york-delhi air india flight
- tata air india
- Directorate General of Civil Aviation