Asianet News TamilAsianet News Tamil

தடை இல்லா மின்சாரம் நிச்சயம்..உதய் மின் திட்டம் முழு விவரம் இதோ !!!

details on-uday-scheme
Author
First Published Jan 9, 2017, 8:41 PM IST


உஜ்வால் மின் விநியோக உறுதியளிப்புத் திட்டத்தில்(உதய்) 21-வது மாநிலமாக தமிழகம் இணைந்தது. இதன் மூலம் அடுத்த 3  ஆண்டுகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி சேமிக்க இந்த திட்டம் தமிழகத்துக்கு உதவும். 

தமிழ்நாடு  மின்சார வாரியம் மற்றும் மத்திய மின்துறை அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.

டெல்லியில் நடந்த விழாவில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக மின்துறை அமைச்சர் தங்க மணி இடையே முறைப்படி ஒப்பந்தம் கையொப்பமாகி பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்த உதய் திட்டத்தில் தமிழக மின்வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் தொகையான ரூ. 4 லட்சம் கோடியில் 90 சதவீதத்தை ஈடுகட்டும்.

உதய் திட்டத்துக்கு தொடக்கத்தில் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ்கோயல் சென்னை வந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

அதன் விளைவாக உதய் திட்டம் தொடர்பான சந்தேகங்களை களைய மத்திய, மாநில அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

இத்திட்டத்தின் படி, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.. நலிவடைந்த மின்வாரியங்களை சீரமைப்பது, மின் வினியோகத்திலும் தனியாருக்கு அனுமதி,..

பெட்ரோல், டீசல் போன்று, மூன்று மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது, மீட்டர் பொருத்தாத மின் இணைப்புகளே இருக்க கூடாது..

, இலவச மின்சாரத்துக்கும் மீட்டர் பொருத்த வேண்டும், ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் மூலம் மின்கம்பங்கள்,பூமிக்குஅடியில்பதிக்கும் கேபிள்கள்,டிரான்ஸ்பார்ம் அதிகப்படுத்துவது உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.

அதேபோன்று மின்வினியோகமும் கம்ப்யூட்டர் மூலம் நவீனப்படுத்தப்படும். மின் இழப்பு குறைக்கவும், மின் திருட்டை கண்டுபிடிக்கவும் ...

சிறப்பு திட்டம், மின்நுகர்வே குறைக்க எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்துதல், ஏ.சி. பேன், தொழில்சாலை எந்திரங்கள் பயன்படுத்தும் போது அதிகமின்சாரம் நுகரப்படுவதை குறைக்கும் வகையில் நவீன கருவிகள் பொருத்துதல் என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இதற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு உதவிகள் புரியும்.

அதேசமயம், நிதி சீரமைப்பு திட்டம் என்ற பெயரில், மின்வாரிய கடன்களை மாநில அரசு 70 சதவீதம், அதாவது ரூ.30,420 கோடி கடனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மீதமுள்ள 30 சதவீதமும் பாண்டுகளாக மாற்றப்பட்டு, வங்கிகளுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழக அரசின் கடன் குறைப்பு காரணமாக ஆண்டுக்கு வட்டித் தொகையாக ரூ. 950கோடியை மிச்சப்படுத்தும்.

தமிழகத்துக்கு மின்சார தேவைக்கு கூடுதல் நிலக்கரியை சலுகை விலையில் இனி அளிக்கப்படும். மத்திய மின்பகிர்மானங்களான என்.டி.பி.சி., சி.பி.எஸ்.யு. ஆகியவற்றில் இருந்து குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும். தரமான நிலக்கரி உள்ளிட்ட நிலக்கரி தொடர்பான வசதிகள் 100 சதவீதம் கிடைக்கும் என்பதால் மின்கட்டணம் குறையும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 4320 கோடி சேமிக்கப்படும்.

உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததால் உடனடிப் பலன் தமிழக மக்களுக்கு கிடைக்கும். தமிழக அரசின் கூடுதல் மின்தேவையை நிறைவு செய்து, மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் அளிக்க முடியும்.

இதற்கு முன், குஜராத், மகாராஷ்டிரா, காஷ்மீர், ராஜஸ்தான், கோவா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் உள்பட 20 மாநிலங்கள் இதுவரை இணைந்துள்ளன.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios