உத்தரப்பிரதேச மாநிலம், சமாஜ்வாதிக் கட்சியின் எம்.எல்.ஏ. பாதுகாவலரின் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கான்பூர் மாவட்ட ஆட்சியர் கவுசால் ராஜ் சர்மா கூறுகையில், “ சமாஜ்வாதிக் கட்சி எம்.எல்.ஏ. இர்பான் சோலங்கி. இவரின் பாதுகாவலர் குலாம் ஜிலானி. இவர் கான்பூர் மால் சாலையில் உள்ள உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் கணக்கு வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க குலாம் ஜிலானி சென்றார். அப்போது அவர் கணக்கில் ரூ.100 கோடி(ரூ.99,99,02,724) இருந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக எம்.எல்.ஏ. சோலங்கிக்கு தகவல் அளித்தஜிலானி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க கூறினார்.
இந்த புகார் எனக்கு வந்தபின், ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளரை தொடர்பு கொண்டு பேசினேன். மேலும், ஜிலாயை புகார் மனு அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம். ஜிலாயின் வங்கிக்கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. சிறிது நாட்களுக்கு பணம் எடுக்க முடியாது'' எனத் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:56 AM IST