பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகியின் வீட்டை இடித்துத் தள்ளிய அரசு
மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏவுக்கு நெருக்கமான பிரவேஷ் சுக்லா சட்டவிரோதமாகக் கட்டிய வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா சட்டவிரோதமாகக் கட்டிய வீட்டு ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர் ஒருவர் மீது பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்ததாக வெளியான வீடியோ வைரலாகப் பரவியது. பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டு அவர் மீது பிரிவுகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294, 504 மற்றும் SC/ST சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பிரவேஷ் பாஜக நிர்வாகி என்றும் தெரியவந்துள்ளது. சித்தி கேதார்நாத் சுக்லா பாஜக எம்எல்ஏவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து புல்டோசர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்திருந்த நிலையில் ம.பி. நிர்வாகம் இந்த அவரது வீட்டை இடித்திருப்பது கவனித்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த மாயாவதி தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் ஆதிவாசி / தலித் இளைஞர் மீது உள்ளூர் பாஜக தலைவர் சிறுநீர் கழித்த சம்பவம் வெட்கக்கேடானது, மனிதாபிமானமற்றது மற்றும் கண்டனத்திற்குரியது. வீடியோ வைரலான பிறகுதான் அரசு விழித்துக்கொண்டிருக்கிறது என்பதும் மிகவும் வருத்தம் அளிக்கிறது." என்றும் அவர் கூறினார்.
அனைத்து கிளைகளிலும் மகிளா சம்மான் கணக்கு தொடங்கலாம்! பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு