கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் எனவும்  டெல்லியில் காவல் துறை எச்சரித்துள்ளது . பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் காவல்துறை இத் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது . சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸ் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது .  இதுவரையில் உலக அளவில் 8, 944 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . 

சுமார் 2 லட்சத்து 18 ஆயிரத்து  766 பேருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  அதில் 84 ஆயிரத்து 376  பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர் .  இந்நிலையில் கொரோனா 4 கட்டங்களாக தாக்கக் கூடியது என சீன தகவல் வெளியிட்டுள்ளது .  தற்போது இந்தியா இரண்டாவது கட்டத்தில் உள்ளது இந்நிலையில் ,  இந்தியாவில் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது .  குறிப்பாக தலைநகர் டெல்லி  ,  மகாராஷ்டிரா ,  கேரளா ,  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது .  அதேபோல் நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.  

இந்நிலையில் மத்திய அரசு மக்கள் பின்பற்ற வேண்டிய 15 அம்ச வழிமுறைகளை அறிவித்துள்ளது .  இந்நிலையில் டெல்லியில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் . டெல்லி போலீஸ்  பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது . அதன் ஒரு பகுதியாக ஐந்து பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.   அதேபோல் தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்  எனவும் எச்சரித்துள்ளது இதை  மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.