உச்சகட்ட காற்று மாசு.. சிக்கித்தவிக்கும் தலைநகரம்.. புதிய யோசனையை கையிலெடுக்கும் டெல்லி - பலன் தருமா?
Delhi Air pollution : இந்திய தலைநகர் டெல்லி கடந்த சில நாட்களுக்கு முன்பு, உலகின் மிக மாசு நிறைந்த பகுதியாக திகழ்ந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு காற்றின் தரம் சில இடங்களில் 670 AQIக்கு அதிகமாக உள்ளது. இது அபாய நிலைக்கும் அப்பால் உள்ள நிலை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவல்.
இந்நிலையில் இந்த நிலையை சரிசெய்ய டெல்லி அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றது. அதில் ஒன்று தான் செயற்கை மழை. டெல்லியில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டை சமாளிக்க இந்த மாதம் க்ளவுட் சீட்டிங் (Cloud Seeding) மூலம் செயற்கை மழையை உருவாக்கி மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.
கான்பூரில் செயற்கை மழை பொழிவது குறித்து ஆராய சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஐஐடி கான்பூர் குழுவை நேற்று நவம்பர் 8ஆம் தேதி சந்தித்தார். அந்த சந்திப்பைத் தொடர்ந்து, நவம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால், டெல்லியில் செயற்கை மழை பெய்யக்கூடும் என்று திரு ராய் குறிப்பிட்டார். தலைநகரில் உள்ள காற்றுத் தரக் குறியீட்டு (AQI) கவலைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இது என்றார் அவர்.
திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு 2.25 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் தகவல்
செயற்கை மழை என்றால் என்ன?
கிளவுட் சீட்டிங் என்று அழைக்கப்படும் செயற்கை மழை, மழைப்பொழிவை ஊக்குவிப்பதற்காக மேகங்களில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு வானிலை மாற்ற நுட்பமாகும். மழைக்கான மேக விதைப்பு விஷயத்தில், சில்வர் அயோடைடு அல்லது பொட்டாசியம் அயோடைடு போன்ற பொதுவான பொருட்கள் விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மேகங்களுக்குள் தூவப்படும்.
இந்த துகள்கள் கருக்களாக செயல்படுகின்றன, அதைச் சுற்றி நீர் துளிகள் உருவாகலாம், இறுதியில் மழைத்துளிகளின் வளர்ச்சிக்கு அது வழிவகுக்கும். இந்த செயல்முறை பொதுவாக அரை மணி நேரம் எடுக்கும், ஆனால் அதன் வெற்றி ஈரப்பதம் நிறைந்த மேகங்கள் மற்றும் பொருத்தமான காற்று மாதிரிகள் போன்ற குறிப்பிட்ட வானிலை நிலைமைகளைப் பொறுத்தது.
குறிப்பிட்ட பகுதிகளில் மழைப்பொழிவை அதிகரிப்பது அல்லது வறட்சி நிலையைப் போக்குவதே இதன் நோக்கம். இது விவசாயம், சுற்றுச்சூழல் அல்லது நீர் வள மேலாண்மை நோக்கங்களுக்காக வானிலை முறைகளை பாதிக்கப் பயன்படும் ஒரு சிறந்த முறையாகும். இதை பயன்படுத்தான் இப்பொது முடிவு செய்துள்ளது டெல்லி அரசு.
விமானத்தில் உல்லாசப் பயணம்... தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்
டெல்லியில் இன்று 670 AQI உள்ளது, இது மிகவும் ஆபத்தானது என்று டெல்லி காற்று மாசு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இப்பொது உள்ள அந்த மாசுபட்ட காற்றை சுவாசிப்பது, ஒரு நாளைக்கு சுமார் 10 சிகரெட்டுகள் புகைப்பது போன்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.