Asianet News TamilAsianet News Tamil

திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு 2.25 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் தகவல்

பத்து நாள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு 4.25 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

TTD to Issue 4.25 Lakh Time-Slotted Sarva Darshan Tokens for Vaikunta Ekadasi Darshan
Author
First Published Nov 8, 2023, 10:45 PM IST | Last Updated Nov 8, 2023, 10:46 PM IST

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு 4.25 லட்சம் தரிசன டிக்கெட்டுகளை வழங்க இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் டிசம்பர் 23 முதல் திருப்பதியில் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள சுமார் 100 கவுன்டர்களில் கிடைக்கும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டி, திருமலையில் வரவிருக்கும் நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அப்போது, "வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்து நாள் நடைபெறும் இந்த் திருவிழாவில் 4.25 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

பகவத் கீதை ஆபாசமானது, அருவருப்பானது; யூதர்கள் படுகொலைக்குக் ஆதரவானது: எழுத்தாளர் ஸ்லாவோஜ் ஜிசெக்

TTD to Issue 4.25 Lakh Time-Slotted Sarva Darshan Tokens for Vaikunta Ekadasi Darshan

பொது தரிசன டிக்கெட்டுகள் தவிர, நவம்பர் 10ஆம் தேதி முதல் 2.25 லட்சம் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ரூபாய் 300 விலையில் ஆன்லைனில் வெளியிடப்படும். கூடுதலாக, 20,000 டிக்கெட்டுகள் ஸ்ரீவாணி டிரஸ்டு மூலம் ஆன்லைனில் விற்கப்படும். முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஸ்ரீவாணி டிக்கெட் வைத்திருப்பவர்கள் வைகுண்ட ஏகாதசியின்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிப்படுவார்கள்.

வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் பத்து நாட்களில் விஐபி பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவா தரிசனம் மற்றும் கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர்கள், உடல் ஊனமுற்ற நபர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பிற சிறப்பு தரிசனங்களை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் AI பயணம்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சாதனை படைக்க வாய்ப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios