விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதச் சட்டம் சாத்தியமா?
குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், அரசாங்கம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் கோடி செலவாகும். இது கிட்டத்தட்ட மத்திய அரசு சமீபத்திய இடைக்கால பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ஒதுக்கிய தொகையான ரூ. 11.11 லட்சம் கோடிக்குச் சமமானதாக இருக்கும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதச் சட்டத்தைக் கோரி விவசாயிகள் தேசியத் தலைநகர் டெல்லிக்கு பேரணியாகச் செல்கின்றனர். சில விவசாயக் குழுக்கள் உலகளாவிய குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தை கோருகின்றன. அதாவது, விவசாயிகள் பயிரிடும் ஒவ்வொரு பயிரையும் மத்திய அரசே குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.
மூன்று விவரங்களைக் கூறி இதைப்பற்றி விளக்கலாம். ஒன்று, விவசாய விளைபொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 40 லட்சம் கோடி (2020ஆம் நிதி ஆண்டில்). இதில் பால், விவசாயம், தோட்டக்கலை, கால்நடைகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை பயிர்களின் விளைச்சலும் அடங்கும். இரண்டு, மொத்த விவசாய விளைபொருட்களின் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சம் கோடி (2020ஆம் நிதி ஆண்டின்படி). இவற்றில் 24 பயிர்கள் அடங்கும். அவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளாக, இந்தியாவின் விவசாய நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இன்றியமையாதது என்று சொல்லப்பட்டு வருகிறது. 2020 நிதி ஆண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் மொத்தம் ரூ. 2.5 லட்சம் கோடிக்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்த விவசாய உற்பத்தியில் 6.25 சதவீதம். குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் உள்ள விளைபொருட்களின் உற்பத்தியில் 25 சதவீதம்.
இனி சார்ஜர் தேவை இல்ல... மொபைலை பாக்கெட்டில் வைத்தாலே சார்ஜ் ஆகிவிடும்!
இப்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், அரசாங்கம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் கோடி செலவாகும். இது கிட்டத்தட்ட மத்திய அரசு சமீபத்திய இடைக்கால பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ஒதுக்கிய தொகையான ரூ. 11.11 லட்சம் கோடிக்குச் சமமானதாக இருக்கும்.
ரூ. 10 லட்சம் கோடி என்பது கடந்த ஏழு நிதியாண்டுகளில் (2016 மற்றும் 2023க்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.67 லட்சம் கோடி) உள்கட்டமைப்புக்காக செய்த ஆண்டு சராசரி செலவினத்தை விட அதிகமாகும். எனவே உலகளாவிய குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கை தற்போதைய பொருளாதாரம் நிலையில் சாத்தியமானது அல்ல என்று மத்திய அரசு கருதுகிறது.
இந்தக் கூடுதல் செலவை அரசாங்கத்தால் ஏற்க முடியும் என்றாலும் ரூ. 10 லட்சம் கோடி பணத்ததை ஈடுகட்ட உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக்கான செலவினங்களைக் கணிசமாகக் குறைக்க வேண்டும். அல்லது நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் அதிக வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் எழுந்துள்ள இந்தப் பிரச்சினை விவசாயம் சார்ந்ததோ பொருளாதாரம் சார்ந்ததோ அல்ல, முற்றிலும் அரசியல் சார்ந்தது என்று மத்திய அரசு கருதுகிறது.
இந்தப் போராட்டம் ரூ.10 லட்சம் கோடி செலவழிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தூண்டிவிடப்பட்டிருக்கிறது என்றும் பாஜக அரசு நினைக்கிறது. 2025ஆம் நிதி ஆண்டின் ரூ. 45 லட்சம் கோடி பட்ஜெட்டில் இருந்து ரூ.10 லட்சம் கோடியை எடுத்து இந்த வழியில் செலவு செய்துவிட்டால், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை தடம் புரளச் செய்யும் என்றும மோடி அரசு சொல்கிறது.
டெல்லி விவசாயிகள் போராட்டம்: முற்றுகையைத் தடுக்க பேரணிக்கு தடை, எல்லையில் பலத்த பாதுகாப்பு