Asianet News TamilAsianet News Tamil

மிகவும் மாசுபட்ட இடம்.. உலக அளவிலான சர்வே.. முதலிடத்தில் டெல்லி - கண்ணெரிச்சல், தொண்டை வலியால் மக்கள் அவதி!

New Delhi : தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்றின் தரம் தொடர்ந்து "அபாயகரமான நிலையில்" இருப்பதால், புது தில்லி நச்சு மூடுபனியால் மூடப்பட்டுள்ளது. Swiss Group IQAirன் தரவுகளின்படி, இந்தியாவின் தலைநகரம், இன்று உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Delhi become first in most polluted place in the world AQI crossed 480 ans
Author
First Published Nov 5, 2023, 9:07 AM IST | Last Updated Nov 5, 2023, 12:16 PM IST

இன்று காலை 7.30 மணிக்கு 483 AQI என்ற அளவுடன் புது தில்லி மீண்டும் நிகழ்நேர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர் 371ல் உள்ளது. காற்று மாசுபாட்டால் மோசமாகப் பாதிக்கப்பட்ட டாப் 5 நகரங்களில், கொல்கத்தா மற்றும் மும்பையும் முறையே AQI 206 மற்றும் 162 என்ற அளவில் உள்ளது.

குறைந்த வெப்பநிலை, காற்றின் பற்றாக்குறை மற்றும் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் கழிவுகள் ஆகியவற்றின் பருவகால கலவையானது காற்று மாசுபாட்டின் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். புது தில்லியின் 20 மில்லியன் குடியிருப்பாளர்களில் பலர் கண்களில் எரிச்சல் மற்றும் தொண்டை அரிப்பு குறித்த புகார்களை தெரிவித்துள்ள நிலையில், டெல்லியில் சில இடங்களில் AQI 550க்கு மேல் இருந்து வருகின்றது, இதனால் காற்று அடர்த்தியான சாம்பல் நிறமாக மாறியுள்ளது.

அயோத்தியில் ராமாயணத்தைப் பிரதிபலிக்கும் புதிய ரயில் நிலையம்! வெற லெவல் லுக்கில் AI போட்டோஸ்!

AQI அளவு 0 முதல் 50 வரை இருக்கும் பொது நல்லதாகக் கருதப்படுகிறது, அதே சமயம் 400 முதல் 500க்கு இடைப்பட்ட நிலையில் உள்ள அளவு ஆரோக்கியமான மக்களைப் எளிதில் பாதிக்கிறது மற்றும் ஏற்கனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது மிகவும் ஆபத்தானதாக மாறுகின்றது. "எனது கடந்த 24 மணிநேர பணியில், குழந்தைகள் இருமலுடனும், குழந்தைகள் பலர் அசௌகர்யத்துடனும் வருவதையும், பலர் பதட்டத்தில் மூச்சு விடுவதையும் பார்த்தேன்" என்று டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் அகமது கான் சமூக வலைதளமான ட்விட்டரில் தெரிவித்தார்.

PM2.5 என அறியப்படும் நுண் துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு 523 mg என்ற அளவில் உள்ளது, இது உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை விட 104.6 மடங்கு அதிகம். மனித முடியை விட சுமார் 30 மடங்கு மெல்லியதாகவும், நுரையீரல் வழியாக இரத்த ஓட்டத்தில் ஊடுருவக்கூடியதாகவும் இருக்கும் இந்த துகள்களால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பயங்கரம்.. பாஜக தலைவர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட கொடூரம் - போலீசார் விசாரணை!

தேசிய தலைநகரில் ஒரு நெருக்கடித் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது, இதில் கட்டுமானப் பணிகளை நிறுத்துதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்தல் ஆகியவை அடங்கும். இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது மற்றும் அபாயகரமான காற்று மாசு அளவைக் கூட்டுவதைத் தவிர்ப்பதற்காக மும்பை மற்றும் டெல்லி போட்டிகளில் பட்டாசு வெடிக்க அமைப்பாளர்கள் தடை விதித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios