Asianet News TamilAsianet News Tamil

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத சிறந்த தீபாவளி.. டெல்லியில் குறையும் காற்று மாசு - ஆனாலும் அமலில் இருக்கும் தடைகள்!

Delhi Air Quality : டெல்லியில் பட்டாசு மீதான தடையை கடுமையாக அமல்படுத்தியதன் மூலம், டெல்லிக்கு கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு சிறந்த தீபாவளி திருநாள் உதயமாகியுள்ளது என்று தான் கூறவேண்டும். 

Delhi Air Pollution level decreasing best diwali in last eight years full details ans
Author
First Published Nov 12, 2023, 11:29 AM IST | Last Updated Nov 12, 2023, 11:29 AM IST

தெளிவான வானம் மற்றும் ஏராளமான சூரிய ஒளியை கண்டு இன்று டெல்லிவாசிகள் விழித்தெழுந்தனர், மேலும் நகரின் காற்றுத் தரக் குறியீடு (AQI) காலை 7 மணிக்கு சுமார் 202 ஆக இருந்தது, கடந்த மூன்று வாரங்களில் ஏற்பட்டுள்ள ஒரு நல்ல மாற்றம் இது, சில தினங்களுக்கு முன்பு அது 600ஐ கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. 

பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட AQI அளவு 'நல்லது' என்றும், 51 மற்றும் 100க்கு இடையில் உள்ளதை  'திருப்திகரமானது' என்றும், 101 மற்றும் 200க்கு இடையில் உள்ள அளவை 'மிதமானது' என்றும், 201 மற்றும் 300க்கு இடையில் உள்ள அளவை 'மோசமானது' என்றும், 301 மற்றும் 400க்கு இடையில் உள்ள நிலையை 'மிக மோசமானது' என்றும், 401 மற்றும் 450க்கும் இடையில் உள்ளது 'கடுமையானது' என்றும், மற்றும் 450க்கு மேல் 'கடுமையான பிளஸ்' என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஒளிமயமாக மாறிய அயோத்தி ராமர் கோயில்!

நேற்று சனிக்கிழமையின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 220ஆக இருந்தது, இது எட்டு ஆண்டுகளில், அதிலும் தீபாவளிக்கு முந்தைய நாளின் மிகக் குறைவான அளவாகும். இந்த முறை, டெல்லியில் தீபாவளிக்கு சற்று முன்னதாக காற்றின் தரத்தில் கூர்மையான முன்னேற்றம் காணப்பட்டது, இது வெள்ளிக்கிழமையன்று பெய்த இடைவிடாத மழை மற்றும் காற்றின் வேகம் காற்றின் மாசை குறைத்துள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளியன்று AQI 312 ஆகவும், 2021ல் 382 ஆகவும், 2020ல் 414 ஆகவும், 2019ல் 337 ஆகவும், 2018ல் 281 ஆகவும், 2017ல் 319 ஆகவும், 2016ல் 431 ஆகவும் பதிவாகியுள்ளது. அக்டோபர் 28 முதல் இரண்டு வாரங்களுக்கு நகரம் "மிகவும் மோசமான" முதல் "கடுமையான" காற்றின் தரத்தை அனுபவித்தது மற்றும் இந்த காலகட்டத்தில் தலைநகரில் ஒரு மூச்சுத் திணறல் பிரச்சனை பலருக்கு ஏற்பட்டது.

தீபாவளி கின்னஸ் சாதனை! 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தி!

இருப்பினும், தலைநகரின் பல பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இரவு ஆங்காங்கே பட்டாசுகள் எரியும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறைந்த வெப்பநிலை மற்றும் பட்டாசு எரிப்பதால் டெல்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மாசு அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios