கேரளாவில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்ற இருவர் உயிரிழந்தனர்.

ஆலப்புழாவை சேர்ந்த 75 வயது முதியவர் கார்த்திகேயன் , பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்றிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதே போல கேரள மின்சார வாரிய ஊழியரான உன்னி , வங்கியில் விண்ணப்பம் நிரப்பி கொண்டிருந்த போது இரண்டாம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதே போல மும்பையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்ற முதியவர் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதேபோல் நேற்று, குஷிநகர் மாவட்டம் கோரக்பூரைச் சேர்ந்த துணி சலவை செய்யும் பணிபுரியும் 40 வயது தீர்த்தராஜி எனும் பெண். தனது கணக்கில் சேமிப்பதற்காக இரண்டு 1,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிக்கு எடுத்து சென்றவரிடம், வங்கி ஊழியர் இனிமேல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொல்வதைக் கேட்டவுடன், அதிர்ச்சியில் வங்கிக்கு வெளியே மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு சம்பவத்தில், மஹுவா மஃபி கிராமத்தில், 8 வயது சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் வழியில், அவரது தந்தை பெட்ரோல் நிரப்பச் சென்று 1,000 ரூபாய் நோட்டைக் கொடுத்து, பெட்ரோல் வங்கியில் சில்லறை பெற காலதாமதம் ஆனதால் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.