முன்னாள் ஹாசி அப்துல்லா செம்பரிகா கொலை வழக்கில் தவாஹா அஹமது முக்கிய சாட்சியாக இருக்கிறார். அதனால், முன்னாள் ஹாசியை கொலை செய்தவர்கள் இப்போதுள்ள ஹாசியை கொலை செய்யத் துடிக்கிறார்கள் என பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம், உடுப்பி, சிக்மங்களூரு, மற்றும் கேரள மாநிலம், ஹாசரகோடு ஆகிய இடங்களில் உள்ள தக்‌ஷினா கன்னடா மவுல்வி அமைப்பில் ஹாசியாக இருப்பவர் தவாஹா அஹமது.  முஸ்லீம் சமூக மக்களிடையே சக்தி வாய்ந்தவர்.  இதற்கு முன் இந்த அமைப்பில் ஹாசியாக இருந்தவர் இவரது மாமா  அப்துல்லா செம்பரிகா மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவருக்கு பிறகு ஹாசியாக தவாஹா அஹமது பதவி ஏற்றுக் கொண்டார். 

இந்நிலையில் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக கடந்த ஜனவரி மாதம் ஹாஜி, மங்களூரு கத்ரி காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இப்போது டி.ஜி., ஐ.ஜி.பி மற்றும் மங்களூர் கமிஷனரிடம் தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார். காஜியின் மகன் ஹுசைன் அவதூறு பரப்பிய எஸ் நியூஸ் விஷன் சேனல் மீது எஃப்.ஐ.ஆர் செய்துள்ள நகலையும் வெளியிட்டுள்ளார். 

இஸ்லாமிய குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பேசியதை அவதூறாக சித்தரித்து பொய் செய்திகளைப் பரப்பிய வஞ்சகர்களுக்கு எதிராக முஸ்லிம் மத்திய குழு புகார் அளித்தது. இந்நிலையில், முஸ்லிம் மத்திய குழுத் தலைவர் மசூத் மற்றும் துணைத் தலைவர் இப்ராஹிம் கோடிஜால் ஆகியோருக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக பகீர் புகார் தெரிவிக்கின்றனர். அமைதி மற்றும் அகிம்சை வேண்டுகோள் விடுத்துள்ளதால் அவர்களை எஸ் டி.வி, காவல்துறையினரில் ஷூ நக்கிகள் என அந்த சேனல் அவமானப்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து  காஜியின் நேரடி உதவியாளராகவும், சிஏஏ போராட்டத்திற்கு எதிராகவும் உள்ள, அப்துல் ரசாக், ’’ஹாஜியை கொல்ல பல முறை சதி நடந்துள்ளது. அவரது கார் ஓட்டுநரை வைத்தே ஒருமுறை கொல்லப்பார்த்தார்கள். இதற்கு காரணம், முன்னாள் ஹாசி அப்துல்லா செம்பரிகா கொலை வழக்கில் தவாஹா அஹமது முக்கிய சாட்சியாக இருக்கிறார். அதனால், முன்னாள் ஹாசியை கொலை செய்தவர்கள் இப்போதுள்ள ஹாசியை கொலை செய்யத் துடிக்கிறார்கள்’’எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.