Asianet News TamilAsianet News Tamil

அப்படி போடு...! சிறுமிகளை கற்பழித்தால் இனி மரண தண்டனைதான்...? 

Death penalty for criminals raping girls under the age of 12
Death penalty for criminals raping girls under the age of 12
Author
First Published Jan 21, 2018, 12:45 PM IST


12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கற்பழிப்பு
இந்தியா முழுவதும் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்திய அரசு பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் அது தொடர்ந்த வண்ணமே உள்ளது. 
 

தண்டனை குறைவு
மேலும் மேலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் கடுமையான தண்டனைகள் இயற்றப்படாததே எனவும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர். 
 

சென்னையில்...
சில நாட்களுக்கு முன்பு இது போன்ற நிகழ்வு சென்னையில் கூட அரங்கேறியது. ஹாசினி என்ற சிறுமியை கற்பழித்து கொலை செய்த தஷ்வந்த் என்ற வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்தான். ஆனால் வெளியே வந்து நகைக்காக தனது தாயையும் கொலை செய்தான். 

இதையடுத்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. 
 

காங்கிரஸ்
இந்நிலையில், ஹரியான மாநிலத்திலும் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியிருந்தது. 
 

மரண தண்டனை
இதைதொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஹரியான முதலமைச்சர் மனோகர்லால் கட்டா, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios