நாடு முழுவதும் வெப்பம் மற்றும் மழைக்கு 1,600 பேர் உயிரிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2016ம் ஆண்டை மிக மிக வெப்பமான ஆண்டாக தொிவித்துள்ள இந்திய வானிலை மையம்,ராஜஸ்தான் மாநிலம் பாலோடியில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும், 1901ம் ஆண்டிற்கு பிறகு 2016ம் ஆண்டின் குளிர்காலத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் வெப்பம் மற்றும் மழைக்கு 1,600 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 40% பேர் கடும் வெயிலினால் பலியானவர்கள். வெயிலைத் தொடர்ந்து, புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பெரும்பாலானோர் இறந்துள்ளனர். கடந்த வருடம் 4 புயல்கள் உருவானதாக கூறிய அவர், தமிழகத்தில் உருவான வர்தா புயலுக்கு 18 பேர் உயிரிழந்தாக குறிப்பிட்டார்.