Shocking Video: தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் 1ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியருக்கு தர்ம அடி
ஹைதராபாத் மாநிலத்தில் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியரை சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
ஹைதராபாத் மாநிலம் போடுபல் பகுதியில் கிரண் இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இதே பள்ளியில் படிக்கும் 1ம் வகுப்பு சிறுமி திடீரென பள்ளிக்கு செல்லமாட்டேன் என அடம் பிடித்து வீட்டில் இருந்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் குதித்த பெண்கள்; திகைத்து நின்ற அதிகாரிகள்
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரியும் நபர் நடனம் சொல்லிகொடுக்கும் பாணியில் அந்தரங்க பகுதிகளை தொட்டு சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேரடியாக பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட நடன ஆசிரியரை தலைமை ஆசிரியரின் அறைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர்.
இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பெற்றோரிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.