ஆட்சியர் அலுவலகத்தில் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் குதித்த பெண்கள்; திகைத்து நின்ற அதிகாரிகள்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட புதுமாப்பிள்ளை காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவபாரதி. தேவபாரதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திட்டமிட்டபடி கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. அப்போது சினிமாவில் வருவது போல் தாலி கட்டும் நேரத்திற்கு முன்பாக எண்ட்ரி கொடுத்த காவல் துறையினர் மணமகன் தேவ பாரதியிடம் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; ஒட்டுமொத்த தலித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பா.ரஞ்சித்
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செய்வதறியாது திருமண மண்டபத்திலேயே திகைத்து நின்றனர். அப்படிப்பட்ட சூழலில் உறவினர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தேவ பாரதி விசாரணையின் போது காவல் நிலையத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு கதறி துடித்த உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
உள்துறை செயலாளர் அமுதா உள்பட தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்
அங்கு அவர்களுக்கு முறையான பதில் கிடைக்காத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட முற்பட்டனர். ஆனால் அவர்களுக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உறவினர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர் தங்கள் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.