தெலங்கானாவில் ஆபாச படங்களுக்கு அடிமையான மகனின் கையை தந்தை ஒருவர் கசாப்பு கடை கத்தியால் துண்டாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பஹெடி ஷெரீப் பகுதியைச் சேர்ந்த காலித் செல்போனில் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். நாளடைவில் அவர் ஆபாச படங்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் காலித்தை அவரது தந்தை குரேஷி எச்சரித்துள்ளார். ஆனால் காலித் தொடர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குரேஷி காலித்தை கண்டித்துள்ளார். இதனால் மகன், தந்தை இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காலித் தூங்கிக் கொண்டிருக்கும் போது குரேஷி, காலித்தின் கையை கசாப்பு கடை கத்தியை வைத்து துண்டாக வெட்டியுள்ளார். கை மணிக்கட்டிற்கு மேல் பகுதி துண்டாக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து குரேஷியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கால்டாக்சி டிரைவர்!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கால்டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல்லாவரம் அடுத்த திரிசூலம், இலுப்பை தோப்பு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. கட்டிட மேஸ்திரி. இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் முருகன். கால் டாக்சி டிரைவர். இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு கந்தசாமியின் 5 வயது மகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முருகன், சிறுமியிடம் சாக்லேட் கொடுத்து, நைசாக பேசி தனது வீட்டிற்கு விளையாட வருமாறு அழைத்துச் சென்றார். 

அங்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே இரவு நீண்ட நேரமாகியும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த கந்தசாமி, அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது, முருகன் வீட்டில் இருந்து சிறுமியின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனே கந்தசாமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சிறுமி அலங்கோலமான நிலையில் அழுது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, நடந்தவற்றை சிறுமி கூறி அழுதுள்ளாள்.

இதையடுத்து, முருகனை பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

3 வயது சிறுமியை பஸ் கிளீனர் பாலியல் பலாத்காரம்!

கொல்கத்தா கொல்கத்தாவில் 3 வயது சிறுமியை பஸ் கிளீனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் உள்ள கால்வாய் சாலையில் நேற்று முன்தினம் மாலை பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே 3 வயது சிறுமியும், அவளது 5 வயது அண்ணனும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சாக்லேட் தருவதாக கூறி அந்த சிறுமியை, பஸ் கிளீனர் ஷேக் முன்னா பஸ்சுக்குள் அழைத்து சென்றார். சற்று நேரத்தில் அந்த சிறுமியை கிளீனர் பாலியல் பலத்காரம் செய்துள்ளார். 

இதனால் சிறுமி அலறியதால் அவனது அண்ணன் வந்து பஸ் கதவை திறக்குமாறு கெஞ்சியபடிய வெளியே இருந்து கதவை தட்டினான். ஆனாலும் அந்த நபர் சிறுமியை விடுவதாக இல்லை. இதையடுத்து சிறுவன் விரைந்து சென்று தனது தாயிடம் சம்பவம் பற்றி தெரிவித்தான். உடனே தாய் அக்கம் பக்கத்தினரை அழைத்து கொண்டு அங்கு சென்று அந்த சிறுமியை மீட்டார். பஸ் கிளீனரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட  அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.