குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மத்தியஅரசு மானியத்துடன் வழங்குகிறது, அதற்கு அதிகமான சிலிண்டர்களை சந்தை விலைக்கு பெற்றுக் கொள்ள வேண்டும். சா்வதேச சந்தையில் நிா்ணயிக்கப்படும் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சமையல் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றி அமைக்கின்றன. கடந்த மாதம் மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை  ரூ.145 வரை அதிகரித்தது. இதனால்  சிலிண்டர் ஒன்றுக்கு அரசு வழங்கும் மானியமும் ரூ.153.86-இல் இருந்து ரூ.291.48 என அதிகரித்தது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதையடுத்து மானியமில்லா சிலண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மானியமில்லா சமையல் சிலிண்டர்  (14.2 கிலோ) விலை கடந்த மாதம் ரூ858-ஆக இருந்த நிலையில் விலை 805 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல் ஒவ்வொரு நகரிலும் விலை குறைந்துள்ளது, சென்னையில் ரூ.826, மும்பையில் ரூ.776.5, கொல்கத்தாவில் ரூ.839- என விலை குறைந்துள்ளது