அவர்களை தூக்கில் போட வேண்டும்... ஆவேசமடைந்த அரவிந்த் கெஜ்ரிவால்!!
பெண் மீது காரில் மோதியதுடன் பெண்ணை சுமார் 20 கி.மீ தூரம் இழுந்து சென்ற குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பெண் மீது காரில் மோதியதுடன் பெண்ணை சுமார் 20 கி.மீ தூரம் இழுந்து சென்ற குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் 5 பேருடன் வந்த கார் ஒன்று ஸ்கூட்டியில் சென்ற பெண் மீது மோதி அந்த பெண்ணை சுமார் 20 கி.மீ தூரம் இழுந்து சென்றுள்ளது. இதில் அந்த பெண்ணின் ஆடைகள் கிழிந்ததோடு அவரது தசைகளும் கிழிந்துள்ளன. இதுக்குறித்து தகவலறிந்த வந்த காவல்துறையினர் அந்த காரை பிடித்து பறிமுதல் செய்ததோடு, அதில் இருந்த 5 பேரையும் கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 3 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு விதிமுறைகள்... வெளியிட்டது மத்திய அரசு!!
இதனிடையே இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவாலும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும். இந்த சம்பவம் குற்றங்களிலேயே அரிதினும் அரிதான சம்பவம். துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடமும் இதுகுறித்து பேசி இருக்கிறேன்.
இதையும் படிங்க: முதல்வர் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு... உச்சக்கட்ட பரபரப்பில் பஞ்சாப்!!
குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். கருணை காட்டக் கூடாது என்றும் வலியுறுத்தி இருக்கிறேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார். முன்னதாக ஆளுநர் வினய் சக்சேனாவின் இல்லத்தின் முன்பு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் குவிந்து இளம் பெண்ணுக்கு நீதி கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வினய் சக்சேனாவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.