நாடு முழுவதும்‌ மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்நிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் சியுஐடி எனும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்‌ தேர்வானது வருகின்ற ஜூலை 15 முதல்‌ ஆகஸ்ட்‌ 10 ஆம்‌ தேதி வரை நடைபெறும்‌ என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும்‌ மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்நிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் சியுஐடி எனும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்‌ தேர்வானது வருகின்ற ஜூலை 15 முதல்‌ ஆகஸ்ட்‌ 10 ஆம்‌ தேதி வரை நடைபெறும்‌ என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில்‌ உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில்‌ மாணவர்கள்‌ சேர்க்கைக்கு 12 ஆம்‌ வகுப்பு மதிப்பெண்கள்‌ மட்டுமல்லாமல்‌ பொது நுழைவுத்‌ தேர்வு மதிப்பெண்கள்‌ கட்டாயம்‌ என்று யுஜிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் மாநில, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களும் விருப்பத்தின் பேரில் இந்த நுழைவுத் தேர்வினை நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. 

நாடு முழுவதும்‌ உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில்‌ இளங்நிலை படிப்புக்கான மாணவர்‌ சேர்க்கைக்கு இந்தாண்டு முதல் சியுஐடி எனும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்‌ தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில்‌, மத்திய பல்கலைக்கழங்களில் இளங்நிலை படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு நடத்தப்படும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்‌ தேர்வு (சியுஐடி) தேதிகள்‌ அறிவிக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க: பிளஸ் 1 மாணவர் சேர்க்கை.. சிபாரிசு அடிப்படையில் சீட்.. கடும் நடவடிக்கை பாயும்.. எச்சரித்த பள்ளிக் கல்வித்துறை

அதன்படி, இளங்நிலை பொது நுழைவுத்‌ தேர்வு வருகின்ற ஜூலை 15, ஜூலை 16, ஜூலை 19, ஜூலை 20, ஆகஸ்ட்‌ 4, ஆகஸ்ட்‌ 5, ஆகஸ்ட்‌ 6, ஆகஸ்ட்‌ 7, ஆகஸ்ட்‌ 8 மற்றும்‌ ஆகஸ்ட்‌ 10 ஆகிய தேதிகளில்‌ நடைபெறும்‌ என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” இந்த தேர்வானது இந்தியா முழுவதும் 534 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தியாவிற்கு வெளியே 13 நகரங்களில் நடத்தப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 

இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிதற்கான கால அவகாசம் கடந்த ஏப்ரல் 2 ஆம் தொடங்கி மே 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. மேலும் இந்த தேர்வானது தமிழ்‌,தெலுங்கு, கன்னடம்‌, மலையாளம்‌, மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம்‌, ஹிந்தி மற்றும்‌ உருது உள்ளிட்ட 13 மொழிகளில்‌ கணினி அடிப்படையில்‌ நடைபெறும். 

இதனிடையே விண்ணப்பதாரர்களின்‌ கோரிக்கையின்‌ பேரில் இணையதளம்‌ மூலமாக வியாழன்‌ மற்றும்‌ வெள்ளி(ஜூன்‌ 23,24) விண்ணப்பிக்கலாம்‌ என்றும்‌, ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள்‌, இரு நாள்களுக்குள்‌ விண்ணப்பப்‌ படிவத்தில்‌ திருத்தங்களைச்‌
செய்யலாம்‌ என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மக்களே அலர்ட் !! தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா..? இன்று முதல் முன்பதிவு தொடக்கம்.. முழு தகவல்..

பொது நுழைவுத்தேர்வை முன்னிட்டு விண்ணப்பதாரர்களுக்கு இ-அட்மிட்‌ கார்டு என்டிஏ இணையதளம்‌ மூலம்‌ தற்காலிகமாக வழங்கப்படும்‌ என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 43 மத்திய பல்கலைக்கழகங்கள்‌, 13 மாநில பல்கலைக்கழகங்கள்‌, 12 நிகர்நிலைப்‌ பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ 18 தனியார்‌ பல்கலைக்கழகங்கள்‌ என 86
பல்கலைக்கழகங்களுக்கு 9,50,804 விண்ணப்பங்கள்‌ வரப்பெற்றுள்ளது.

ஒரு விண்ணப்பத்தாரர்‌ சராசரியாக ஐந்துக்கும்‌ மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளார்‌. மேலும்‌ 54 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட தனிப்பட்ட பாடங்கள்‌ பல்வேறு விண்ணப்பதாரர்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக என்டிஏ அறிக்கை கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பது எவ்வாறு..? முழு விபரம்..