5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது குறித்து ஆலோசிக்கவும் ஆய்வுசெய்யவும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று மாலை டெல்லி கூடுகிகிறது

5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது குறித்து ஆலோசிக்கவும் ஆய்வுசெய்யவும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று மாலை டெல்லி கூடுகிகிறது

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள், நிரந்தரஅழைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், 5 மாநிலத் தேர்தல் பொறுப்பாளர்கள் என 60-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

படுதோல்வி

பஞ்சாப், உத்தரகாண்ட், உ.பி. கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. பஞ்சாப்பில் ஆட்சியைத் தக்கவைக்க முடியாமல் உட்கட்சி பிரச்சினையால் ஆட்சியை இழந்தது. 

மூத்த தலைவர்கள் அதிருப்தி

கடந்த ஆண்டு மே மாதம் மேற்குவங்கம், கேரளாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து அசோக் சவான் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கையை காங்கிரஸ் மேலிடத்திடம் அளித்தது. அந்த அறிக்கை மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காதபோது, இந்த காரியக் கமிட்டிக்கூட்டம் தேவையா என மூதத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஆய்வுக் குழு

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை, கேரளாவில் பினராயி விஜயனை மீண்டும் முதல்வராக வருவதைத் தடுக்கவும் முடியவில்லை. இந்த தோல்வி குறித்து ஆய்வு செய்ய மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், மூத்த தலைவர்கள் மணிஷ் திவாரி, ஜோதிமணி எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் குழு, தோல்விக்கான காரணங்கள் குறித்து மட்டும் ஆய்வு செய்யாமல் அதைஎவ்வாறு சரி செய்வது, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன, சீர்திருத்தங்கள் என்ன என்பது குறித்து பரிந்துரை செய்தது. அமைப்புரீதியாக சந்திக்கும் பிரச்சினைகள், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுளள நிதிப்பற்றாக்குறை ஆகியவற்றை தீர்க்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எவ்வாறு கூட்டணி அமைய வேண்டும், மற்ற கட்சிகளை எவ்வாறு அரவணைப்பது ஆகியவை குறித்தும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கிடப்பில் போடப்பட்ட அறிக்கை

இந்த குழு தனது அறிக்கையை கடந்தஆண்டு ஜூலை மாதமே தலைவர் சோனியா காந்தியிடம் அளித்தது. ஏறக்குறைய 200 தலைவர்களிடம், 80க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் அளிக்கப்பட்டு பதில்பெறப்பட்டு அதை ஒருங்கிணைத்துஅறி்க்கை தயாரிக்கப்பட்டது.

ஆனால், அந்த அறிக்கை குறித்து இதுவரை எந்த ஆலோசனையும் நடத்தப்படவி்ல்லை, அதுபற்றி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசிக்கவும் இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது, அப்போது கூடஇந்த அறிக்கை குறித்து எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படவில்லை. அந்த அறிக்கையின் ஒட்டுமொத்த சாரம்சம் குறித்துகூட எந்தவிதமான கருத்தையும் காங்கிரஸ் மேலிடம் தெரிவிக்கவில்லை.