பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இருந்து வருகிறார். இவரது மனைவி ரிவபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பா.ஜ.க. இணைந்துள்ளார். குஜராத்தில் நடந்த விழாவில் குஜராத் விவசாயத்துறை அமைச்சர் பால்டு முன்னிலையில் பா.ஜ.க. இணைந்தார்.  

பாஜக இணைந்த பின்னர் ரிவபா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- ‘பிரதமர் மோடியே எனக்கு உந்துசக்தி. அதனால்தான் பாஜகவில் இணைகிறேன். தனியாக என்னால் எந்த மக்கள் சேவைகளையும் செய்ய முடியாது. அதே நேரம் பாஜகவில் சேர்ந்துள்ளதன் மூலம் சிறந்த மக்கள் சேவையை அளிக்கமுடியும். என் முதல் இலக்கு பெண்களுக்கு அதிகாரம் பெற்று தர வேண்டும் என்பதுதான். 

தேர்தலுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்ததை ஒரு குறுகிய எண்ணத்துடன் பார்க்கக் கூடாது. என்னுடைய தற்போது எண்ணம், கட்சிக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்பது மட்டும் தான். இதை தவிர இந்த மேடையில் பேசுவதற்கு இல்லை என்று தெரிவித்தார். 

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்தில் கிரிக்கெட் வீரர் ரவீந்தர ஜடேஜாவும், அவரது மனைவி ரிவாபா ஜடேஜாவும் நரேந்திர மோடியை சந்தித்தனர். இதனிடையே கடந்த வருடம் ரிவாபா குஜராத்திலுள்ள கர்னி சேனா பெண்கள் அமைப்பிற்கு தலைமை பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.