கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.

வெள்ளிக்கிழமை வரை, 199.70 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இ்ந்நிலையில் 200 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டிவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது எனும் இலக்கை 17 மாதங்களில் இந்தியா எட்டி புதிய வரலாறு படைத்துள்ளது. 

கொரோனா பரவலைத் தடுக்கும்வகையில் 15ம் தேதி முதல் 75 நாட்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நாடுமுழுவதும் நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி 18 வயது முதல் 59வயதுள்ள அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

18முதல் 59 வயதுவரை உள்ளவர்களில் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செவ்வாய்கிழமை வரை 1.15 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு 3.56 கோடி குழந்தைகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18வயதுள்ள பிரிவில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டு, முன்களப்பணியாளர்களுக்கு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே 1ம் தேதி முதல் 18வயது நிரம்பியவர்கள் அனைவரும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதியளித்தது. 2022ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 15 முதல் 18வயதுள்ளவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதியளித்தது.

ஜனவரி 10ம் தேதி முதல், முன்களப்பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.