இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியின் 3ம் கட்ட மனித பரிசோதனையில், அதன் செயல்திறன் 81% என்று தெரியவந்துள்ளது. 3ம் கட்ட சோதனை முடிவை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளும், “அவசர பயன்பாடு” என்பதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதமே மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளித்தது மத்திய அரசு. 3ம் கட்ட மனித பரிசோதனைகள் செய்யாமலேயே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதற்கு மருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் 25,800 பேரிடம் 3ம் கட்ட பரிசோதனை செய்ததில் 81% செயல்திறன் மிக்க தடுப்பூசி என்று முடிவு வந்துள்ளது. இதன்மூலம் உலகிலேயே அதிக செயல்திறன் மிக்க தடுப்பூசி என்ற நம்பிகத்தன்மையை கோவேக்சின் பெற்றுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்தியாவில் ரூ.150(விரும்புபவர்கள் பணம் செலுத்தலாம்) என்ற விலைக்கு கோவேக்ஸின் போடப்படுகிறது. அதுவும் மருத்துவ விலை, லாஜிஸ்டிக்ஸ் ஆகிய செலவுகளுக்காக ரூ.100. உலகிலேயே மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கும் தடுப்பூசி கோவேக்சின் தான்.

அறிவியல் வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சியும் பணக்காரர்கள் மட்டும் அனுபவிக்கக்கூடியவையாக இல்லாமல், மருத்துவ மற்றும் விஞ்ஞான வளர்ச்சி அனைவருக்குமானது என்பதை, கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் கிடைக்க செய்ததன் மூலம் இந்திய அரசாங்கமும், இந்திய மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளும், இந்திய உற்பத்தியாளர்களும் உலகிற்கு நிரூபித்துள்ளனர்.