சத்யேந்தர் ஜெயின் மசாஜ் வீடியோ விவகாரம்... அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!!
டெல்லி திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோ குறித்து நாளைக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோ குறித்து நாளைக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பணமோசடி வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைதாகி திகார் சிறையில் உள்ளார். இந்த நிலையில் சிறையில் சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துக்கொள்ளும் வெளியானது. கைதாகி சிறையில் இருப்பவர் மசாஜ் செய்துகொள்ளும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மங்களூரில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல..! தீவிரவாத தாக்குதல்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி
இந்த நிலையில் சிறையில் மசாஜ் செய்துகொள்வது போல் வெளியான வீடியோ குறித்து நாளைக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக சிறையில் இருந்து வீடியோ வெளியானதை அடுத்து, அமலாக்க இயக்குனரகம் மீது சத்யேந்திர ஜெயின் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம்... உதகையை சேர்ந்தவருக்கு தொடர்பா? போலீஸார் அதிரடி!!
அதில், சத்யேந்தர் ஜெயின் வழக்கு தொடர்பான எந்த தகவலையும் ஊடகங்களில் கசிய விடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அமலாக்கத்துறை சார்பில் சிறையில் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான வீடியோவை கசியவிட்டது. எனவே, அமலாக்க இயக்குனரகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி விகாஸ் துல், அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.