பணியில் இருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  மக்கள் சில நேரங்களில் எங்கள் மீது எச்சில் துப்ப்பியதாக கொல்கத்தாவில் பணியாற்றிய செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் செவிலியர்கள் பலர் கடந்த வாரம் தங்களது பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்தனர்.  இந்நிலையில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று வருகின்றனர்.

இதேபோன்று தமிழகம், வடகிழக்கு மாநிலம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் செவிலியர்கள் பணியில் இருந்து விலகியதற்கான சரியான காரணம் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  இதனால் மருத்துவ பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஊர் திரும்பிய செவிலியர்களில் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, ’எங்களது பணியை விட்டு சென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை.  ஆனால், பணியில் இருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  மக்கள் சில நேரங்களில் எங்கள் மீது எச்சில் துப்பினர். எங்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் பற்றாக்குறையாக இருந்தன. நாங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் எங்களை கேள்வி கேட்டனர்’என வேதனை தெரிவித்தார்.