Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவின் கோரப்பசி... 3-வது நிலைக்கு தள்ளப்படுகிறதா இந்தியா..? பலி எண்ணிக்கை உயர்வால் பீதி..!

இத்தாலியில் மட்டும் கொரோனாவால் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது, இதுதவிர 92, 472 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை இந்தநோய்க்கு மருத்து கண்டுபிடிக்க முடியாததால் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் செய்வதறியாமல் விழி பிதுங்கியுள்ளனர்.

Coronavirus cases in India rise to 979, death toll at 25
Author
Kerala, First Published Mar 29, 2020, 11:42 AM IST

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக  உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். 

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில், வளர்ந்த நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். இத்தாலியில் மட்டும் கொரோனாவால் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது, இதுதவிர 92, 472 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை இந்தநோய்க்கு மருத்து கண்டுபிடிக்க முடியாததால் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் செய்வதறியாமல் விழி பிதுங்கியுள்ளனர்.

இதையும் படிங்க;- அண்ணியுடன் கட்டிலில் வெறி தீர கொழுந்தன் உல்லாசம்... நேரில் பார்த்த சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!

Coronavirus cases in India rise to 979, death toll at 25

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 979-ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus cases in India rise to 979, death toll at 25

இதையும் படிங்க;- கட்டிலில் கள்ளக்காதலனுடன் காட்டுத்தனமாக மனைவி உல்லாசம்.. திடீரென வந்த கணவர்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

இதுதொடர்பாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. தற்போதுள்ள உள்ள நிலவரப்படி நாடு முழுவதும் 979 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களில் 86 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios