Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் கரோனோ வைரஸ் எதிரொலி..! தீவிர கண்காணிப்பின் கீழ் 80 பேர்...!

உலக நாடுகள் மத்தியில் ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தென்படும் கரோனோ வைரஸ் பாதிப்பு

corona virus in kerala
Author
Kerala, First Published Jan 25, 2020, 2:37 PM IST

உலக நாடுகள் மத்தியில் ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தென்படும் கரோனோ வைரஸ் பாதிப்பு

இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் சீனாவில் இருந்து மும்பை வந்த ஆறு பேருக்கு வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அதில் நான்கு பேருக்கு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற இருவரும் கஸ்தூர்பா மருத்துவமனையில் தனிமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. 

corona virus in kerala

சீனாவிலிருந்து மட்டுமல்லாமல் வேறு எந்த நாட்டில் இருந்து வந்தாலும் 28 நாட்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... கரோனோ  வைரஸ் மிக அதிகமாக பரவுவதை அடுத்து சீனாவில் தங்கி இருக்கும் மாணவர்கள்,வேலை செய்பவர்கள் என அனைவரும் அவரவர் நாட்டிற்கு திரும்ப மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தியர்களும் இந்தியா திரும்பி வருகின்றனர். 

corona virus in kerala

குறிப்பாக தற்போது கேரளாவில் 80 பேர் சீனாவில் இருந்து வருகை புரிந்த இருக்கின்றார்கள். அவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் சுகாதார துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் தற்போது 7 பேருக்கு லேசான காய்ச்சல் தென்படுவதால் சந்தேகத்தின் பேரில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை "கரோனோ வைரஸ்" இருந்தால் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவும்...அவர்களை  தனிமைப்படுத்தப்பட்டு வேறு எங்கும் யாருக்கும் பரவாது தடுக்க பல்வேறு முயற்சிகளும் திட்டங்களும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios