வடமாநிலங்களில் இந்து மற்றும் முஸ்லீம் நோயாளிகளுக்கு எனத் தனித்தனி வார்டுகளில் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12,000 க்கும் மேல் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 400 க்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆனால், கொரோனா பீதியிலும் மக்களை மதத்தைக் காட்டி பிரிக்கும் செயல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இந்து மக்களைத் தனி வார்டிலும் இஸ்லாமிய மக்களைத் தனி வார்டிலும் வைத்து சிகிச்சை அளிப்பதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி சமூகவலைதளங்களில் கண்டனங்களையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம்  மாநில அரசு அறிவுறுத்தல் காரணமாகவே இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதாக கூற அதை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.